Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 06– 08 – 2022

மேஷம்: இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும். ஆனால் அவர்களது உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்: இன்று பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரத்து திருப்தி தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் குடும்ப கவலை உண்டாகும். கணவன் மனைவிக் கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கடகம்: இன்று மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பமும் உண்டாகும். முன்பு கிடைத்த அனுபவம் இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும். எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

சிம்மம்: இன்று தருமசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சனை தீரும். அடுத்த வரைநம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் நடக்கும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

கன்னி: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக் கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தை பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு வீண் அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்: இன்று தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்து ழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது. பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

விருச்சிகம்: இன்று பெண்களுக்கு பணதேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

தனுசு: இன்று எந்தஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடி தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

மகரம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இதமான உறவு காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம்
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

கும்பம்: இன்று எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது. எல்லா காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக் கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

மீனம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி கள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவ தில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்ப வர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். பல வகையிலும் நற்பலன்களை தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். கவனமாக பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

 

admin

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

21 hours ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

22 hours ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

22 hours ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

22 hours ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

22 hours ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

23 hours ago