விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு?
கார்த்தி நடிக்கவிருக்கும் ‘கைதி-2’ படமும் ‘டில்லி’ கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் பெயரில் ‘டில்லி’ என்ற தலைப்பில் டீஸர் ஒன்று தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இது இணையத்தில் விவாதமாக மாறியிருக்கிறது.
ஏனென்றால், ‘கைதி’ படத்தில் கார்த்தியின் பெயர் டில்லி. ஆகையால் ‘கைதி 2’ படத்தின் பெயர் இதுவா, டீஸர் படமாக்கி இருக்கிறார்களா என விவாதங்கள் இணையத்தில் நடைபெற்று வருகின்றன.
அல்லு அர்ஜுன் படத்தை முடித்துவிட்டு, ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனாலேயே இந்த விவாதம் வலுத்துள்ளது. ‘டில்லி’ என்ற பெயரில் தனியொரு படத்தினை உருவாக்க ட்ரீம் வாரியர் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதா என்பது விரைவில் தெரியவரும்.
ஆனால், ‘கைதி 2’ படத்தின் பெயரை மாற்ற ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘கைதி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இக்கதையின் தொடர்ச்சியாகவே ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது இக்கதைகளின் தொடர்ச்சியாக ‘கைதி 2’, ‘ரோலக்ஸ்’, ‘விக்ரம் 2’ உள்ளிட்டவற்றை லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். மேலும், மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படம் ஆக்சன் ஜானரில் தற்போது உருவாகி வருகிறது.


