vishal in lathi movie release update
நடிகர் விஷாலின் லத்தி திரைப்படம் டிசம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி உட்பட பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
இவற்றில் லத்தி திரைப்படத்தை ஏ வினோத்குமார் இயக்க சுனைனா, பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ராணா புரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் மூலமாக ரமணா மற்றும் நந்தா உள்ளிட்டோர் படத்தை தயாரிக்கின்றனர்.
மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய என் பி ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீசர் உள்ளிட்டவை வெளியாக்கி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது. இப்படியான நிலையில் தற்போது இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஷால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…