Thamarai Selvi’s Fun-Filled Shopping Spree at Velavan Stores
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.
தனது ஷாப்பிங் அனுபவம் குறித்து பேசிய தாமரை செல்வி, தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தாலும், வேலவன் ஸ்டோர்ஸுக்கு அருகிலேயே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி இருப்பதால் எளிதாக வந்து ஷாப்பிங் செய்ய முடிவதாக தெரிவித்தார்.
பெண்களுக்கான புடவைகள், பிளவுஸ்கள், நைட்டிகள், சுடிதார் மெட்டீரியல்கள், லெக்கின்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆடை வகைகள் குறைந்த விலை முதல் பிரீமியம் கலெக்ஷன்கள் வரை கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரே நிறத்தில் அதிக எண்ணிக்கையிலான புடவைகள் தேவைப்படுபவர்களுக்கு, அவர்களின் தேவைக்கேற்ப ஆர்டர் செய்து வாங்கும் வசதியும் இருப்பதாக தாமரை செல்வி கூறினார். திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரே மாதிரியான ஆடைகளை அணிய விரும்புபவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
வேலவன் ஸ்டோர்ஸின் பட்டுப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஏராளமான புடவை மற்றும் லெஹங்கா கலெக்ஷன்களையும் அவர் பார்வையிட்டார். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் பல்வேறு டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் பட்டுப் புடவைகள் இடம்பெற்றிருப்பதை அவர் பாராட்டினார்.
தொடர்ந்து குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கான ஆடைப் பிரிவுகளையும் தாமரை செல்வி பார்வையிட்டார். குழந்தைகளுக்கான டி-ஷர்ட்கள், பேன்ட்கள், ஸ்கர்ட்கள், சுடிதார் செட்கள் உள்ளிட்ட பல்வேறு ஆடைகளும், ஆண்களுக்கான சட்டைகள், பேன்ட்கள், கோட் சூட்கள் உள்ளிட்டவையும் பல்வேறு சலுகைகளுடன் கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் என குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான ஆடைகளை ஒரே இடத்தில் தேர்வு செய்து வாங்கும் வகையில் வேலவன் ஸ்டோர்ஸ் அமைந்துள்ளதாக தாமரை செல்வி குறிப்பிட்டார்.
சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸை பிரசாந்த் டவர்ஸ் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக எளிதில் சென்றடையலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியும் உள்ளது. ரயில் மற்றும் பேருந்து மூலம் வரும் வாடிக்கையாளர்களும் எளிதில் அணுகும் வகையில் ஷோரூம் அமைந்துள்ளது.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்து வரும் நிலையில், ‘பிக் பாஸ்’ தாமரை செல்வியின் வருகையும் தற்போது கவனம் பெற்றுள்ளது. புதிய டிசைன்கள், விதவிதமான ஆடை கலெக்ஷன்கள் மற்றும் சிறப்பு சலுகைகளுடன் வேலவன் ஸ்டோர்ஸ் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…
‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை கயாடு லோகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும்…