Arasan Delayed But Here’s the Good News – Simbu Announces a Special Diwali Surprise!
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, அமீர், கிஷோர், விக்ராந்த், யோகலட்சுமி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இதனிடையே, ‘அரசன்’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்ய விரும்பாததால், பொங்கலுக்கு படம் வெளியாகாது என சிம்பு தற்போது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரசிகர்கள் மத்தியில் பேசிய சிம்பு, “படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ள நாங்கள் விரும்பவில்லை. சிறந்த திரைப்படத்தை உங்களுக்கு வழங்க கடுமையாக உழைத்து வருகிறோம். ‘அரசன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.
மேலும், “ரசிகர்களை இனியும் காத்திருக்க வைக்க முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், ஒரு நல்ல செய்தி இருக்கிறது. ‘அரசன்’ படத்தின் உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரு முன்னோட்டக் காட்சியை படமாக்கியுள்ளோம்.
அந்த வகையில், ‘The World of Arasan’ என்ற பிரத்யேக முன்னோட்டத்தை தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். ‘அரசன்’ படத்திலிருந்து வெளியாகும் இந்த சிறப்பு காட்சியை ரசிகர்கள் பெரிய திரையில் காணவிருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதனால், ‘அரசன்’ படத்தின் முழுமையான வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டியிருந்தாலும், தீபாவளிக்கு ‘The World of Arasan’ மூலம் சிம்பு தரப்பிலிருந்து அதிரடியான சர்ப்ரைஸ் கிடைக்கவுள்ளது.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை கயாடு லோகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும்…
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…