நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல வருடங்களாக உடல் நலக் குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மக்களின் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக பிறகு தீவு திடலுக்கு மாற்றப்பட்டு மீண்டும் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில் வடிவேலு, அஜித் ஆகியோர் வரவில்லை. அஜித் துபாயில் இருப்பதால் தொலைபேசி வாயிலாக பிரேமலதா விஜயகாந்த்துக்கு ஆறுதல் கூறினார்.
ஆனால் வடிவேலு விஜயகாந்துக்கு நேரிலும் அஞ்சலி செலுத்தவில்லை தொலைபேசி வாயிலாகவோ அல்லது வீடியோ வாயிலாகவோ இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
வடிவேலு திரை உலகில் அறிமுகமாக காரணமாக இருந்தவர் விஜயகாந்த் தான். அப்படி இருக்கையில் அரசியலுக்காக வடிவேலு விஜய்காந்தை தரக்குறைவாக பேசி அவருக்கு எதிராக மாறினார். இருந்த போதிலும் இதுவரை விஜயகாந்த் வடிவேலுக்கு எதிராக ஒரு இடத்திலும் பேசியது கிடையாது.
அப்படி இருந்தும் வடிவேலு இரங்கல் தெரிவிக்காத விஷயத்தை பார்த்து மனிதாபிமானமே இல்லாத நடிகர். நிச்சயம் விஜயகாந்தின் ஆத்மா அவரை மன்னிக்கவே மன்னிக்காது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Appo Ippo - Lyrical video , Indian Penal Law (IPL) , TTF Vasan , Kishore…
மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…
https://youtu.be/QC_9eRGrkjQ?t=1