Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமல்ஹாசனை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

Vijay Sethupathi is the villain for the famous actor following Kamal Haasan

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி, கமல் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘விக்ரம்’ படத்திலும், சீனுராமசாமி இயக்கத்தில் ‘மாமனிதன்’ படத்திலும் நடித்துள்ளார். ‘மாமனிதன்’ திரைப்படம் வருகிற ஜூன் 23-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி தற்போது தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘விடுதலை’, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’, ‘காந்தி டாக்ஸ்’, ’மும்பைக்கர்’ உள்ளிட்ட படங்கள் உள்ளது.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு அடுத்து திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இதில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்த பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்ததை தொடர்ந்து மகேஷ் பாபு படத்தில் நடிக்க இருப்பதை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்குமுன் 2020-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘உப்பெனா’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.