Vijay film director directs Yogibabu
இன்றைக்கும் வடிவேலு நகைச்சுவைக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் நகைச்சுவை எழுதுபவர்கள்தான். வடிவேலுவின் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகளை எழுதியவர் எஸ்.பி.ராஜ்குமார். பொதுவெளியில் இரண்டு நபர்களுக்குள் நடக்கும் விஷயத்தை அப்படியே நகைச்சுவை காட்சியாக எழுதி வெற்றி பெற்றவர்.
விஜய்யை வைத்து சுறா என்ற படத்தையும் எடுத்திருக்கிறார். அந்தப்படத்தில் மருத மலை மாமணியே முருகைய்யா என்ற பாடலை நகைச்சுவையாகக் காட்டி ரசிக்க வைத்திருப்பார். இப்போது எஸ்.பி.ராஜ்குமார் யோகிபாபுவை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார். நகைச்சுவை காட்சிகள் வித்தியாசமாக வந்துள்ளதாம்.
இசையமைப்பாளராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் சினிமாவில் இருக்கும் வி.ஆர்.ராஜேஷ் படத்தைத் தயாரிக்கிறார். இவர் கொரோனா பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட பலருக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வந்தார். இப்போதும் சாலைகளில் வாழ்வோருக்குத் தினமும் மூன்று வேலை இலவசமாக உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். சமீபத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடிய சுமார் 3500 மேடை மெல்லிசை கலைஞர்களின் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியிருக்கிறார்.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…