Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தில் விஜயின் பெயர் இதுதானா? வைரலாகும் சூப்பர் ஹிட் அப்டேட்

varisu-movie-vijay-name-details

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் “வாரிசு” என்ற படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் விஜய்யின் வழக்கமான ஆக்சன் படம் போல் இல்லாமல் குடும்ப செண்டிமெண்டில் உருவாகி வருகிறது.

மூன்று அண்ணன் ஒரு தம்பி என்று குடும்ப கதையாக இப்படம் உருவாகி வருவதால் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் விஜயின் பெயர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்தில் விஜயின் கதாபாத்திரத்தின் பெயர் ராஜேந்திரன் என்ற தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

varisu-movie-vijay-name-details
varisu-movie-vijay-name-details