vairamuthu post goes viral update
முன்னணி இயக்குனரான பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மண்வாசனை’. இந்த படத்தில் பாண்டியன், ரேவதி, வினு சக்ரவர்த்தி, காந்திமதி, விஜயன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு’ பாடல் 80 காலக்கட்டங்களில் மிகவும் வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘மண்வாசனை’ திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகளை கடந்துள்ளது.
இந்நிலையில், ‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு’ பாடலின் பொருள் புரியாமல் இன்னும் புகார் வருகிறது என்று வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றுடன் நாற்பது ஆண்டுகள் பாரதிராஜாவின் மண்வாசனை வெளிவந்து.
“ஆத்துக்குள்ள நேத்து
ஒன்ன நெனச்சேன்
வெக்கநெறம் போக
மஞ்சக் குளிச்சேன்”என்ற வரியின்
பொருள் புரியாமல்
இன்னும் புகார் வருகிறது
“என் வெட்கத்தின்
சிவப்பு நிறம் பார்த்து
அது ஆசையின்
அழைப்பென்று கருதி
என் முரட்டு மாமன்
திருட்டுவேலை செய்துவிடக்கூடாது
அதனால் மஞ்சள் பூசி
என் வெட்கத்தை மறைக்கிறேன்”
என்பது விளக்கம் இந்த நாற்பது ஆண்டுகளில்
காதலின் விழுமியம் மாறியிருக்கிறது
வெட்கப்பட ஆளுமில்லை
மஞ்சளுக்கும் வேலையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…
திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…
‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…