நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. விரைவில் வெளியாகிறதா ‘சதுரங்க வேட்டை 2’?

அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நிதி தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வந்தது. தற்போது அந்த சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் திரையரங்க உரிமையாளரும், பிரபல விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் முக்கிய பங்காற்றியுள்ளார். படத்தின் நிதி விவகாரம் தொடர்பாக சினிமா ஃபைனான்சியர் மதுரை அன்புச்செழியனிடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில், “தற்போது எனக்கு எந்தப் பணமும் தேவையில்லை. முதலில் படம் திரையரங்குகளில் வெளியாகட்டும். வசூலாகும் தொகையில் இருந்து எனது பங்கை பின்னர் பெற்றுக்கொள்கிறேன்” என அன்புச்செழியன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு, ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம் வெளியாவதற்கான முக்கிய தடையை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

2014ஆம் ஆண்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா ‘சதுரங்க வேட்டை 2’ படத்தை தயாரித்தார். படம் நிறைவடைந்தும் வெளியாகாமல் இருந்தது அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு மனோபாலா மறைந்த நிலையில், அவரது நீண்ட நாள் கனவான இப்படம் தற்போது திரைக்கு வருவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஹெச்.வினோத் கதை எழுத, என்.வி. நிர்மல் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி, திரிஷா, மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, நாசர், ராதாரவி, ஸ்ரீமன், தீரஜ் ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏமாற்று வேலைகள் மற்றும் நவீன முறையிலான நிதி மோசடிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ரசிகர்களுக்கு விறுவிறுப்பான திரையனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suresh

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

1 hour ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

1 hour ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

1 hour ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

2 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

2 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

19 hours ago