பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர் தேவன்.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆலப்புழாவில் உள்ள கணச்சுகுளங்கரை தேவி கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவன் கலந்து கொண்டார். இதில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் பொதுச்செயலாளர் வெள்ளாப்பள்ளி நடேசன் மற்றும் பாஜக தலைவர் பி. ராதாகிருஷ்ணன் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தேவன், தனது அரசியல் விலகல் முடிவை பகிரங்கமாக அறிவித்தார்.

சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகள், தத்துவங்கள் மற்றும் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலையே தான் விரும்புவதாக தேவன் கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜகவில் பணியாற்றிய போதிலும், தனது அரசியல் இலக்குகளை அடைய முடியவில்லை என்றும், தனது பாதை வேறானது என்பதை உணர்ந்ததால் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக ‘கேரளா பீப்பிள்ஸ் பார்ட்டி’ என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்த தேவன், 2020ஆம் ஆண்டு அதனை ‘நவ கேரளா பீப்பிள்ஸ் பார்ட்டி’ என பெயர் மாற்றினார். 2021ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்னர் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். இதையடுத்து அவருக்கு கேரள பாஜக மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

2024 மக்களவைத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு கிடைத்த கணிசமான வாக்குகளிலும் அவரது தேர்தல் வெற்றியிலும் தனது உழைப்பு முக்கிய பங்கு வகித்ததாக தேவன் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, கோவில் நிகழ்ச்சி மேடையில் தேவன் தனது ராஜினாமாவை அறிவித்ததற்கு பாஜக தலைவர் பி. ராதாகிருஷ்ணன் மேனன் அதிருப்தி தெரிவித்துள்ளார். 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்ற பாஜக மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இருந்து விலக தேவன் எடுத்த முடிவுக்கான காரணம் தெரியவில்லை என்றும், ஆனால் தனது விலகலை அறிவிக்க இந்த மேடை பொருத்தமான இடம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Suresh

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

3 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

4 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

4 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

4 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

4 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

21 hours ago