Bollywood Actress Ananya Raj Dies at 27
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகளால் கடந்த ஓராண்டாக அவதிப்பட்டு வந்த அவர், கடந்த ஜூலை 15ஆம் தேதி தூக்கத்திலேயே உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அனன்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது மறைவால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து மீள்வதற்காக சிறிது காலம் எடுத்துக்கொண்டதால், இந்த செய்தியை உடனடியாக வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ளனர். கடந்த ஓராண்டு அவருக்கு மிகவும் கடினமான காலமாக இருந்ததாகவும், உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகளை ஒரு வீராங்கனையைப் போல எதிர்கொண்டதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். எனினும், அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.
1998 ஆகஸ்ட் 10ஆம் தேதி பிறந்த அனன்யா ராஜ் சென்குப்தா, டி-சீரிஸ், டைம்ஸ் சீரிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்த இசை வீடியோக்கள் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் 2016ஆம் ஆண்டு வெளியான ‘7 ஹவர்ஸ் டு கோ’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ‘தி ஃபைனல் எக்சிட்’, 2019ஆம் ஆண்டு ‘கோஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் 2022ஆம் ஆண்டு வெளியான ‘தகடே லே’ திரைப்படத்திலும், மூன்று மொழிகளில் வெளியான ‘மெட்ராஸ் கேங்’ படத்திலும் நடித்துள்ளார். குறிப்பாக ‘கோஸ்ட்’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றார்.
அனன்யாவை அவரது குடும்பத்தினர் அன்புடன் ‘பச்சா’ என்று அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தாய் மஞ்சு குப்தா மற்றும் இளைய சகோதரர்கள் ராகுல், ரோகித் ஆகியோர் கடந்த கடினமான காலகட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்ததாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
அனன்யாவின் மறைவுக்கு அகில இந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது. இளம் வயதிலேயே ஒரு திறமையான கலைஞரை திரையுலகம் இழந்துவிட்டதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…
திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…
‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…
தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் விஷால் வெளிப்படுத்தும் மாறுபட்ட பரிமாணமே ‘மகுடம்’ படத்தின் முக்கிய பலம். குடும்ப…
VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva…