Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிம்புவுடன் மோதும் தனுஷ்.. வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்

Vaathi Clash With Pathu Thala Movie Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. தெலுங்கு இயக்குனர் வெங்கி இயக்கி உள்ள இந்த வாத்தி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. அதாவது சிம்பு 10 தல திரைப்படம் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாத்தி படத்தை டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vaathi Clash With Pathu Thala Movie Update
Vaathi Clash With Pathu Thala Movie Update