Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 1-07-2020

மேஷம்: இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வீடு, மனை, வாகனம் போன்ற விசயங்கள் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

ரிஷபம்: இன்று தொழில், வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பண தேவை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கடகம்: இன்று பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை கா ப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். உடனிருப்பவர்கள் ஆதரவு தருவார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்: இன்று தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். தூரத்திலிருந்து உறவினர்கள் இல்லத்திற்கு வந்து போவார்கள். ஒருவருக்கு விட்டுக் கொடுத்து போவது மனதிற்கு நிம்மதியைத் தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி: இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்: இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும்.  பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.  மேல் அதிகாரிகளிடமிருந்து பாராட்டு பெறுவீர்கள்.  வேலையில் நிம்மதி உண்டாகும்.  தாய் தந்தையரின் அன்பு கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்: இன்று எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் எதிர்பார்த்தபடியே நன்கு நடந்து முடியும். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். வாக்கை நிறைவேற்ற கஷ்டப்பட வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 9, 3

தனுசு: இன்று தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் மனதில் நிம்மதி உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் சீட் கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மகரம்: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். சீரான பண வரவு இருக்கும். நண்பர்களால் இல்லத்தில் மனக் கசப்பு ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கும்பம்: இன்று எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். குல தெய்வத்தை பிரார்த்தனை செய்து பின் எந்த ஓரு காரியத்தையும் நிறைவேற்றுங்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

மீனம்: இன்று வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப் பளு கூடும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

admin

Recent Posts

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

17 hours ago

குழந்தையின் மொட்டை விழா.. மீண்டும் ஒன்றாக தோன்றிய மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…

19 hours ago

நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. விரைவில் வெளியாகிறதா ‘சதுரங்க வேட்டை 2’?

அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…

19 hours ago

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர் தேவன்.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…

19 hours ago

27 வயதில் உயிரிழந்த பாலிவுட் நடிகை அனன்யா ராஜ்.. யார் இவர்?

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…

19 hours ago

பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் 36 வயதில் திடீர் மரணம்!

‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…

20 hours ago