Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்?

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்?

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இப்படத்தில், இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே ‘தலைவர் 173’ படத்தில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அவரை தொடர்ந்து சிபி சக்ரவர்த்தியின் முதல் பட நாயகியான பிரியங்கா மோகனும் இந்த படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன. இதன் மூலம் ‘தலைவர் 173’ படத்தில் 2 நாயகிகள் என தெரிய வந்துள்ளது.

ஆனால் இது சிபி சக்கரவர்த்தியின் சாய்ஸ் தான் என்றும், இதற்கு ரஜினி ஓகே சொல்வாரா ? என்றும் கேள்விகள் எழுகின்றன.

பூஜா ஹெக்டே மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் ‘தலைவர் 173’ படத்தில் நடிப்பது உறுதியானாலும் இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கமாட்டார்கள் என்றே தெரிகின்றது. அதிலும் பிரியங்கா மோகன் கண்டிப்பாக இப்படத்தில் முக்கியமான ரோலில் நடிப்பாரே தவிர ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பே இல்லை. ஆனால் பூஜா ஹெக்டே சீனியர் நடிகை என்பதால் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் உள்ளது.

இருந்தாலும் இந்த ஜோடி செட்டாகுமா ? என்பதும் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஒருவேளை ரஜினிக்கு ஜோடியாக மூத்த நடிகை ஒருவர் நடிப்பாரா ? அவரை சேர்த்து ‘தலைவர் 173’ படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள் நடிப்பார்களா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

தற்போது நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர்-2 படத்தில் ரஜினி இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதும் ‘தலைவர்-173’ படப்பிடிப்பு தொடங்கும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்?
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்?