ஜன.3 ஆம் தேதி நடைபெறுகிறது ‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழா!
விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசைவெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக கடந்த 27-ந்தேதி நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்பட 75 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ‘பராசக்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா அறிவிக்கப்பட்டு உள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவிமோகன் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 10-தேதி வெளியாகவுள்ளது. 9-ந்தேதி விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவ்வகையில், இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் வருகிற ஜனவரி 3-ந்தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் ரஜினி மற்றும் கமல் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவியது. இதற்கு தயாரிப்பு தரப்பிலிருந்து ‘அது வதந்தி’ என முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


