தமிழ்ச் சங்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நேற்று 5-வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற தாமரைச்செல்வி. கிராமத்து பின்புலத்தைக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர். தனக்கு கடன் தொல்லை இருப்பதாகவும் அதனை சரி செய்யவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் தாமரைச்செல்வி கூறியிருந்தார்.
மேலும் இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சக போட்டியாளர்கள் இடம் பேசும்போது இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி சம்பளமே வரவில்லை என கூறினார். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆடை ஆபரணங்களை வாங்கி இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடன் வாங்கிக் கொண்டுதான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனை என்னுடைய டீம் ஜெயித்த போது கேஸ் அடுப்பு பரிசாக அளித்தார்கள். உண்மையாகவே எங்கள் வீட்டில் கேஸ் அடுப்பு இல்லை அதனால் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் அதையெல்லாம் நெகட்டிவாக பேசியிருக்கிறார்கள்.
என்னுடைய நிலைமை இப்படி இருக்கும்போது என்னைப்பற்றி வரும் மீம்ஸ்கள் சிரிக்க வைக்கிறது என தாமரைச்செல்வி கூறியுள்ளார்.


