Categories: NewsTamil News

வங்கிக் கணக்கில் பண மோசடி: சுஷாந்த் சிங்கின் சகோதரி, நண்பர், மேலாளரிடம் அமலாக்கத் துறை விசாரணை!!

நடிகர் சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் பணம் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரது சகோதரி நண்பர் மேலாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ஹிந்தி நடிகர் சுஷாந்த்தின் சிங்கின் வங்கி கணக்கில் ரூபாய் 15 கோடி பணம் மோசடி செய்யப்பட்டதாக அவரது தந்தை கே.கே சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில் சுஷாந்த்தின் தோழி ரியா சக்கரவர்த்தி, அவரது தாயார் சந்தியா சக்கரவர்த்தி, சகோதரர் ஜோவிக், சுஷாந்த்தின் மேலாளர் மிராண்டா, ஸ்ருதி மோடி ஆகியோர் மோசடியில் ஈடுபட்டு எனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்தார்.

இந்த பண மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் அமலாக்கத் துறையினர் ரியா சக்கரவர்த்தியிடம் திங்கள்கிழமை சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சுஷாந்த்தின் மூத்த சகோதரி மீட்டு சிங், சித்தார்த் , வர்த்தக மேலாளர் ஸ்ருதி மோடி ஆகியோரிடம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். சுஷாந்த்தின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியது இதுவே முதல் முறை.

இதற்கிடையே சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா சக்கரவர்த்தி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பாக பீகார் மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் மூன்று நாட்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.

admin

Recent Posts

தமிழக வெற்றி கழகம் பற்றி கேட்ட கேள்வி.. திவ்யா சத்யராஜ் கொடுத்த பதில்..!

தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…

28 minutes ago

தயாரிப்பாளரான அஜித் குமார்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…

60 minutes ago

விஜய்க்கும் பவர் ஸ்டாருக்கும் தான் போட்டியே.. புதிய கட்சி தொடங்கப் போகும் பவர் ஸ்டார்..!

விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…

1 hour ago

திருடு போன சீதாவின் தாலி செயின்.. முத்து மீனா எடுக்கும் முயற்சி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…

6 hours ago

விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. சரத்குமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…

6 hours ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

21 hours ago