வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா.. வைரலாகும் புகைப்படம்

எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 41’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ‘2டி என்டர்டைன்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதனிடையே சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே மோதல், இதனால் படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா விலகியதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

இந்நிலையில் நடிகர் சூர்யா இப்படம் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மீண்டும் சூர்யா 41 படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். தொடர் வதந்திகளுக்கு மத்தியில் ஒரு பதிவின் மூலம் சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவரின் இந்த பதிவு சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

Suresh

Recent Posts

தமிழக வெற்றி கழகம் பற்றி கேட்ட கேள்வி.. திவ்யா சத்யராஜ் கொடுத்த பதில்..!

தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…

12 hours ago

தயாரிப்பாளரான அஜித் குமார்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…

12 hours ago

விஜய்க்கும் பவர் ஸ்டாருக்கும் தான் போட்டியே.. புதிய கட்சி தொடங்கப் போகும் பவர் ஸ்டார்..!

விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…

13 hours ago

திருடு போன சீதாவின் தாலி செயின்.. முத்து மீனா எடுக்கும் முயற்சி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…

17 hours ago

விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. சரத்குமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…

17 hours ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 day ago