Sunny Leone dancing in a movie starring Karthik as the hero
நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘தீ இவன்’. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு போன்ற படங்களை இயக்கியவரும், விஜய்சேதுபதியின் சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.
நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாக சுகன்யா நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில், 45 நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், மும்பையிலும் நடைபெற இருக்கிறது. மும்பையில் நடைபெற இருக்கும் படப்பிடிப்பில், நடிகை சன்னி லியோன் நடிக்கும் கவர்ச்சி நடன பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம்.
நடிகை சன்னி லியோன் ஏற்கனவே தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி... 'D55' செம அப்டேட்! 'அமரன்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி…
VALAI Official Teaser , Atharvaa, Rupa Manjari, Vani Bhojan , Jeeva Sankar , Ghibran https://youtu.be/yIUR3EpMteY?si=UCnyp_u5Jc1MSVYs