Sivakarthikeyan’s Fans Meet Held Like a Political Conference
திரையுலக பிரபலங்கள் தங்களது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வுகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் போரூர் அருகே தனது நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார். இதில் சுமார் 2,000 ரசிகர்கள் வெள்ளை சீருடை அணிந்து பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சிவகார்த்திகேயன், வாழ்க்கையில் குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், நன்றாக படித்து நல்ல முறையில் சம்பாதித்து குடும்பத்துடன் பொறுப்புடன் வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர், புத்தக வாசிப்பு சிந்தனைத் திறனை மேம்படுத்தும் என்றும் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதை குறைத்து, புத்தக வாசிப்புக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
“நம்மை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதைப் பற்றி கவலைப்படாமல் நம்முடைய பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என சிவகார்த்திகேயன் பேசினார்.
நிகழ்ச்சி நடைபெற்ற மண்டப வளாகம் முழுவதும் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், அனுமதி சீட்டு வைத்திருந்த ரசிகர்கள் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சந்திப்பு அரசியல் மாநாடு போல் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரசிகர் ஒருவர் கூறுகையில், “நாள்தோறும் நற்பணிகளை செய்ய வேண்டும் என சிவகார்த்திகேயன் கூறினார். எங்களால் முடிந்த அளவுக்கு இல்லாதவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். தற்போது சிவகார்த்திகேயன் கட்சி தொடங்குவதற்கான சூழல் இல்லை. ரசிகர்களாகிய நாங்களும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பவில்லை.
எதிர்காலத்தில் அப்படியொரு சூழல் ஏற்பட்டால், அவர் முன்வைக்கும் கொள்கைகள் மற்றும் நோக்கங்களைப் பொறுத்து ஆதரவு அளிப்போம். நற்பணி இயக்கத்தை எதிர்காலத்தில் எவ்வாறு வளர்த்துச் செல்ல வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆலோசனைகளை வழங்கினார்” என்றார்.
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…