No One Can Take Away Education.. Asuran Completes 7 Years!
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ‘அசுரன்’ திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை வழங்கிய இந்த கூட்டணி, நான்காவது முறையாக ‘அசுரன்’ படத்தின் மூலம் இணைந்தது.
எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி உருவான இப்படத்தில், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தனது குடும்பத்தைப் பாதுகாக்கப் போராடும் சிவசாமி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார். தனது மகனை காப்பாற்றவும், நில உரிமையை மீட்டெடுக்கவும் சிவசாமி மேற்கொள்ளும் போராட்டம், அவரது கடந்தகால வாழ்க்கை மற்றும் ஆக்ரோஷமான பின்னணி என படம் முழுவதும் பரபரப்பான திரைக்கதையுடன் பயணித்தது.
கல்வியின் முக்கியத்துவத்தையும் அதன் வலிமையையும் அழுத்தமாக பதிவு செய்த ‘அசுரன்’, சமூகத்தில் கல்வி ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தையும் எடுத்துரைத்தது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், தனது மகன் சிதம்பரத்திடம் சிவசாமி பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமாக உள்ளது.
“காடு இருந்தா எடுத்துக்குவாங்க, ரூபா இருந்தா பிடுங்கிக்குவாங்க. ஆனா, படிப்பை மட்டும் யாராலும் நம்மகிட்ட இருந்து பறிக்கவே முடியாது சிதம்பரம்”
கல்வியின் வலிமையை எடுத்துரைக்கும் இந்த வசனம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘அசுரன்’ வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…