தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அடுத்த அடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் சிவகார்த்திகேயனுக்கு தற்போது அமரன் படத்தில் நடித்ததற்காக ஃபிலிம் ஃபேர் விருது கொடுத்துள்ளனர்.
விருது வாங்கிய பிறகு பேசிய சிவகார்த்திகேயன் 13 வருஷத்துக்கு முன்னாடி தனுஷ் சார் கூட செகண்ட் ரோல ஒக்காந்து அவார்ட் பங்ஷன் பார்த்தேன் இப்போ 13 வருஷம் ஆயிருக்கு பர்ஸ்ட் ரோ வர்றதுக்கு என்று கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் அமரன் பட குழுவிற்கு நன்றி தெரிவித்த அவர் என்னுடைய ரசிகர்கள் என்னை எப்படி அடிச்சு போட்டு மிதித்தாலும் தூக்கி பிடிக்கிறாங்க உங்களுக்கு பிடிச்ச சிவா அண்ணா இன்னைக்கு ஃபிலிம் பார் அவார்ட் ஓட இருக்கேன் என்று நெகிழ்ச்சியாக பேசி உள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


