Sivakarthikeyan in prince-movie-wrapped
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள ‘டான்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், வெளிநாட்டு நடிகை மரியா ரியான்ஷாப்கா ஆகியோர் நடித்துள்ளனர்.
மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை சுரேஷ் மற்றும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் தமன் இசையில் இரண்டு சிங்கிள் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருந்தது.
இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் இது குறித்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முழுமையான கதை விவரங்கள்…
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson