மீனா போட்ட பிளான்,சிக்கிய விஜயா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் சத்தியமா நான் குடிக்கல என்று சொல்ல மீனா உங்களை எல்லாம் திருத்த முடியாது, நல்ல வேலை இது எல்லாம் பார்க்க என் அப்பா இல்லை இருந்திருந்தால் காலம் முழுக்க கவலைப்பட்டு இருப்பார். எல்லாம் என் தலையெழுத்து என்று சொல்லி கண்கலங்க முத்து அப்போ நீயும் என்னை நம்பலல சரி விடு குடிகாரன் ஆகவே இருந்துட்டு போறேன் ஊர் அப்படித்தான் பேசுது பேசிட்டு போகட்டும் என்று டம்ளரை தட்டி விட்டு வெளியே வந்து விடுகிறார்.

பிறகு மீனாவை ஒரு இடத்தில் சந்தித்த சிட்டி எனன்க்கா எனக்கு என்னமோ அட்வைஸ் பண்ண இன்னைக்கு உன் புருஷனை ஊரே குடிகாரன்னு சொல்லிட்டு இருக்கு அவருக்கு போய் அட்வைஸ் பண்ணு. குடிக்காமல் இருக்க சொல்லு. இல்ல குடிச்சா கார் ஓட்டாமல் இருக்க சொல்லு, இப்போ அவருக்குத்தான் அட்வைஸ் தேவைப்படுது. என்ன பண்றது உன் வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும்னு எழுதி வச்சு இருக்கு என்று நக்கலாக பேசிவிட்டு செல்கிறார்.

பிறகு செல்வம் மற்றும் நண்பர்களிடம் நான் சத்தியமா குடிக்கலடா நீங்கள் ஆவது நம்புங்க என்று சொல்ல உன்னை பற்றி எங்களுக்கு தெரியாதப்பா நாங்க குடிச்சிட்டு கார் ஓட்டுனாலே ஓட்டாதனு எங்கள திட்டுவ என்று சொல்கின்றனர். யார் என்ன நம்பலைன்னாலும் பரவால்ல என் அப்பா கூட என்னை நம்பல என்ன அடிக்க கை ஓங்கிட்டாரு, அவர் பார்த்த பார்வை இருக்கே உன்னை எல்லாம் புள்ளையா பெத்தேன் பாரு என்று சொல்ற மாதிரியே இருந்தது என்று கவலைப்படுகிறார். சரி விடுப்பா நாளைக்கு போய் போலீஸ் ஸ்டேஷன்ல கார் எடுக்கிற வழிய பாரு என்று சொல்கின்றனர்.

அடுத்ததாக மீனா பூ கொடுக்க வர அப்போது மீனாவுக்கு தெரிந்தவர்கள் என்ன முத்து இப்படி பண்ணிடுச்சு. குடிக்கும்னு தெரியும் ஆனால் இப்படி குடிக்கும்னு தெரியாது இப்போ உனக்கு தானே கெட்ட பேரு, முத்துவை ஏதாவது முயற்சி பண்ண வேண்டியதுதானே என்று சொல்கின்றனர். மீனா நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன். இதில் மட்டும் அவரை மாற்றவே முடியல என்று சொல்ல பூ கட்டும் பெண்மணி ஒருவர் என் புருஷன் கூட இப்படித்தான் குடிச்சிகிட்டு இருந்தாரு. வீட்டு பக்கத்துல இருக்க ஒரு வைத்தியர் நாட்டு மருந்து ஒன்னு கொடுத்தாரு இப்ப குடிய விட்டுட்டு ஒழுங்கா வேலைக்கு போறாரு என்று சொல்ல மீனா இதை ஏன் எனக்கு முதல்லயே சொல்லல எனக்கு அந்த மருந்தை வாங்கி கொடுங்க என்று சொல்லி கூட்டி செல்கிறார்.

அதன் பிறகு வீட்டுக்கு வந்த மீனா ஆரஞ்சு ஜூஸ் போட்டு அதில் யாருக்கும் தெரியாமல் மருந்தை கலக்கி வைக்கிறார். அண்ணாமலை போன் பண்ணி கீழே கூப்பிட மீனாவும் கீழே இறங்கி செல்ல அவர் என்னுடைய யூனியன் ஆபீஸ்ல வேலை பண்றவங்களோட பொண்ணுக்கு கல்யாணம் அதனால 50 முழம் பூவும் ரெண்டு மாலையும் ஆடர் கொடுத்து இருக்காரு. முன்பணம் ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கிறார் என்று சொல்லி எடுத்து கொடுக்கிறார். முத்து சொன்ன மாதிரி இந்த பூக்கடை பூக்கடலாக மாறும் என்று வாழ்த்துகிறார். இதை எல்லாம் வெளியிலிருந்து முத்துவும் கேட்கிறார்.

மேலே கிச்சனுக்கு வந்ததும் விஜயா ஜூஸ் போட்டு வைத்திருப்பதை பார்த்து முத்துவுக்கு தான் போட்டு வைப்பா அவன் எங்க இருந்து இதெல்லாம் குடிக்க போறான் என்று எடுத்து மொத்தமாக குடித்து விடுகிறார்.

மேலே வந்த முத்து மீனாவிடம் அப்பா என்ன சொன்னார் என்று கேட்க தேவையில்லாததை குடிக்காமல் ஜூஸ் போட்டு குடிக்க சொல்லு என்று ஆரஞ்சு பழத்தை வாங்கி வந்து கொடுத்தார் என்று சொல்கிறார். ஜூஸ் போட்டு வச்சிருக்கேன் வேணுமா என்று கேட்க முத்து எடுத்துட்டு வா என்று சந்தோஷமாக சொல்கிறார். மீனா கிச்சனுக்கு வந்து பார்க்க விஜயா அந்த ஜூஸை கொடுத்துவிட அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

அத்தை அதை எதுக்கு குடிச்சீங்க என்று கேட்க முத்துவுக்கு தானே போட்ட அவன் ஜூஸையா குடிப்பான்? அவன் தண்ணி கலக்காமல் சரக்கு தான் குடிப்பான் என்று சொல்லி வெளியே செல்ல மீனா அத்தைக்கு ஏதாவது ஆகிடுமோ என்று பயப்படுகிறார். மருந்து வாங்கி கொடுத்த அக்காவுக்கு போன் பண்ண அவர் போனை எடுக்காத நிலையில் நீ வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பி வருகிறார்.

வழியில் செல்வத்தை பார்க்க மீனா மீனா நீங்களாவது அவருக்கு அட்வைஸ் பண்ண கூடாதா என்று கேட்க முத்து குடிக்கவே இல்ல அந்த வீடியோ ஒன்னும் இல்ல என்று சொல்கிறார். எனக்கு எதை நம்புவதுனு தெரியல நான் வேற ஒரு வேலையா போயிட்டு இருக்கேன் என்று கிளம்பி செல்கிறார்.

இங்கே பார்வதி வீட்டுக்கு வர விஜயா அவருடன் பேசிக்கொண்டே இருக்கும் போது வயிறு எரியுது என்று பாத்ரூமுக்கு ஓடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

jothika lakshu

Recent Posts

Haiwaan Official Teaser

Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions

7 hours ago

Ram in Leela Official Trailer

Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…

9 hours ago

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்?

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…

9 hours ago

நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும்: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…

9 hours ago

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகினி…

1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

9 hours ago

‘எல்.கே.ஜி’ பாணியில் அரசியல் வருகையா? ரசிகரின் கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி பதில்!

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…

10 hours ago