baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபி ஈஸ்வரியை தனியாக அழைத்துச் சென்ற நிலையில் ஈஸ்வரி இந்த வேகாத வெயிலில் எதுக்குடா வெளிய கூட்டிட்டு வந்த என்று கேட்கிறார்.
அடுத்து கோபி உனக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்க ஏன் அப்படி கேட்கறீங்க என்று சொல்கிறார். இல்ல ஒரு வாரமா நீயும் ராதிகாவும் சரியாக இல்ல. நீயும் ஏதோ சொல்ல வர ஆனா சொல்ல மாட்ற என்று கேட்க ஆமாமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் இந்த சொல்கிறார். நீங்க பாட்டி ஆக போறீங்கன்னு தெரிஞ்சா எப்படி பீல் பண்ணுவீங்க என்று கேள்வி கேட்க ஈஸ்வரி அதான் ஏற்கனவே பாட்டி ஆகிட்டேனே என்று சொல்கிறார்.
கோபி நம்ம வீட்டுக்கு ஒரு குழந்தை வரப் போகுது என்று சொல்ல ஈஸ்வரி புரியாமல் இருக்கிறார். ஒரு நிமிஷம் என்று சொல்லி கோபி காரை ஓரங்கட்டி கொஞ்சம் விளக்கமாக எடுத்து சொல்ல நான் கூட சொல்லிக்கிட்டே இருந்தேன் உங்களுக்காக ஒரு குழந்தை பெற்றுக்கோங்க அப்படின்னு அவன் என்னமோ என்கிட்ட கோபப்பட்டான். இப்போ எனக்கு சந்தோஷமா இருக்கு என்று சொல்ல கோபி புரியாமல் யாரைப் பத்தி பேசுறீங்க என்று கேள்வி கேட்க நீ எழில பத்தி தானே சொல்ற என்று ஈஸ்வரி திருப்பி கேட்கிறார்.
கோபி நான் அவன பத்தி பேசலமா அவன பத்தி உங்களுக்கு தெரியாதா என்று சொல்ல அப்போ செழியனுக்கு குழந்தை பிறக்க போகுதா அவங்க சண்டை போட்டு இப்ப தானே சேர்ந்திருக்காங்க அதுக்குள்ள எப்படி என்று கேட்கிறார். கோபி இல்லம்மா எனக்கு தான் குழந்தை பிறக்கப் போகுது என்று டென்ஷனில் வார்த்தைகளை விட ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.
கோபி நீ என்ன சொன்ன என்று கேட்க ஆமாம் அம்மா எனக்கு தான் குழந்தை பிறக்க போகுது, ராதிகா கர்ப்பமா இருக்கா என்று அதிர்ச்சி கொடுக்கிறார். ராதிகா அதுக்காக தான் வாந்தி எடுத்தாளா என்று கேட்க கோபி ஆமா ஆமா போன வாரம் ஹாஸ்பிடல் போன போது தான் கன்ஃபார்ம் பண்ணாங்க என்று சொல்கிறார்.
ஈஸ்வரி இது எத்தனாவது மாசம் என்று கேட்க கோபி எனக்கு அந்த கணக்கெல்லாம் தெரியல அடுத்த வாரம் ஸ்கேன் பண்ணனும் என்று சொல்கிறார். பையன் அம்மாகிட்ட நான் அப்பாவாக போறேன்னு சொன்னேன் சந்தோஷப்படுவாங்க ஆனா என்னால சந்தோஷப்பட முடியவில்லை என்று கவலைப்படுகிறார்.
கோபி தெரியாமல் நடந்து விட்டது என்று சொல்ல இந்த குழந்தை உங்களுக்கு அவசியமா? ராதிகாவும் வேண்டாம் என்ற முடிவுல தானே இருக்கா என்று கேள்வி கேட்க கோபி இல்லம்மா அவ பெத்துக்கலாம்னு சொல்றா, அவங்க அம்மாவும் குழந்தை பெத்துக்க சொல்றாங்க. எங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஆதாரமா இருக்கும்னு ஆசைபடுறா என்று சொல்ல ஈஸ்வரி ஊர் உலகம் என்ன பேசும்? இந்த வயசுலையும் குழந்தை பெற்றுக்கறாங்க தான் நான் இல்லன்னு சொல்லல. ஆனா வீடு இருக்கிற இந்த சூழ்நிலையில அதெல்லாம் சரி வராது என்று சொல்கிறார்.
நாளைக்கு உன் பசங்க உன்னை மதிக்க கூட மாட்டாங்க நீ இதுவரைக்கும் நல்ல அப்பாவா இருந்ததற்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்று எடுத்து சொல்கிறார். நான் அவ கிட்ட பேசுறேன் நீ வீட்டுக்கு போ என்று சொல்லி வீட்டுக்கு வருகிறார் ஈஸ்வரி. மேலும் என்னதான் நடந்தாலும் பாக்கியா எங்களை விட்டு போகாமல் இருக்கா எங்களுக்கு அவதான் முதல்ல அதுக்கு அப்புறம் தான் நீ எனவும் அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதன் பிறகு வீட்டுக்கு வந்த ஈஸ்வரி பதட்டமாக இருப்பதை பார்த்து பாக்கியா என்னாச்சு என்று கேட்க வெயில்ல போனா வேர்க்க தான் செய்யும் என்று சமாளிக்கிறார். இந்த பதட்டம் மாதிரி இருக்கீங்களே என்ன விஷயம் எங்க போய்ட்டு வந்தீங்க என்று கேட்க கோபி நான் எங்க அம்மாவ வெளியில கூட்டிட்டு போயிருந்தேன் உன்கிட்ட எங்க போறோம் எதுக்கு போறோம்னு சொல்லிட்டு தான் போகணும் என்று கோபப்படுகிறார்.
ஈஸ்வரி ராதிகா எங்கே என்று கேட்க கோபி அவன் மேல ரூம்ல இருக்கா என்று சொல்ல நான் போய் அவளை பாத்துட்டு வரேன் என்று கிளம்ப கோபி நீங்க எதுக்கு மேல கால் வலியோடு மேல வரிங்க வேண்டாம் என சொல்ல அதான் நீ ஏற வச்சுட்டியே என்று கோபப்படுகிறார். மேடையில் வந்த ஈஸ்வரி ராதிகாவிடம் இது எத்தனை மாசம் இருக்கு ரெண்டு மாசம் என்று சொல்கிறார். ரெண்டு மாசம் தானே அப்படின்னா பிரச்சனை இல்ல இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.
குழந்தை வேணுமா வேணாமா முடிவு பண்ண வேண்டியது நானும் கோபியும் தான் என பதிலடி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…
Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…
Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…
Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…