sirakadikka-aasai-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் காரில் வந்து கொண்டிருக்கும் பிஏ ரோகினி பற்றி தப்பு தப்பாக போனில் தன்னுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டு ரூமை ஏற்பாடு செய்ய சொல்லி கொண்டு வர இதையெல்லாம் கேட்ட முத்து கடுப்பாகிறார்.
ஒரு கட்டத்தில் காரை நிறுத்தும் முத்து பொண்ணுங்கள பத்தி தப்பா பேசுறியா என கீழே இறக்கி அடி கொடுத்து ஓட விடுகிறார். இந்த நேரம் பார்த்து அண்ணாமலை போன் செய்து சீக்கிரம் வா என சொல்ல முத்து கிளம்பி செல்கிறார்.
கோவிலில் வெளியே மீனா உட்கார்ந்து கண்கலங்கி கொண்டிருக்க உன் மாமியார் இவ்வளவு நாளா உன்ன இப்படி தான் நடத்திக்கிட்டு இருக்காங்க என்று அவருடைய அம்மா கேட்கிறார். மீனாவின் தம்பியின் தங்கச்சியும் அவங்கள சும்மா விடக்கூடாது என்று கோபப்பட மீனாவின் அம்மா கொஞ்சம் அமைதியா இருங்க என தடுத்து நிறுத்துகிறார்.
இந்த நேரம் பார்த்து முத்து வந்து இறங்க கல்யாணம் முடிஞ்சிடுச்சா சரி வா உன்ன வீட்ல விட்டுட்டு நான் சவாரிக்கு கிளம்புறேன் என்று சொல்லி மீனாவை கூப்பிட இன்னும் கல்யாணம் முடியல நீங்க போங்க நான் அப்புறம் வருகிறேன் என மீனா கூறுகிறார். மேலும் எனக்குத் தலை வலிக்குது நான் வீட்டுக்கு போறேன் என்று சொல்லி மீனா கிளம்ப முத்து என்ன ஆச்சு என்ன நடந்தது என கேள்வி கேட்க மீனாவின் தம்பியும் தங்கையும் நடந்த விஷயங்களை சொல்கின்றனர்.
அதோடு இல்லாமல் மீனாவின் அம்மா சந்திரா பொண்ணு குடுத்துட்டா எதுவும் பேசாம அமைதியா இருக்கணுமா என்று விஜயா செய்த விஷயங்களால் கண்கலங்கி நிற்கிறார். இதனால் முத்து அவங்கள சும்மா விடக்கூடாது என்று சொல்லி மீனாவை உள்ளே அழைத்துச் செல்ல மீனா அதெல்லாம் இப்ப எதுவும் கேட்க வேண்டாம் கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும் என்று கூறுகிறார்.
ஆனாலும் மீனாவின் பேச்சை கேட்காத முத்து மீனாவை கூட்டிக்கொண்டு கோவிலுக்குள் சென்று எல்லாவற்றையும் நிறுத்தி விஜயா செய்த விஷயங்களை சொல்லி கேள்வி கேட்க அண்ணாமலை, பாட்டி என எல்லோரும் விஜயாவை திட்டுகின்றனர்.
விஜயா மீனாவிடம் நான் பேசினது தப்புனு மன்னிப்பு கேட்டால் தான் இந்த கல்யாணம் நடக்கும் என முத்து தாலியை எடுத்து வைத்துக் கொள்ள எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரோகினி பிஏ வந்துட்டா என்ன பண்றது என இன்னும் பதட்டம் அடைகிறார்.
பிறகு விஜயா தாலியை கொடுடா என வாக்குவாதம் செய்ய முத்துவும் தாலியை கொடுத்து விட இப்பவும் இந்த தாலியை எடுத்து ஓடிட்டா உன்னால என்ன துரத்திட்டு வந்து பிடிக்க முடியுமா என்று மனோஜிடம் சவால் விட மீனா தாலி ஒன்னும் அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது, அது ஒரு பொண்ணு கழுத்துல ஒரு முறை தான் ஏறும் இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கட்டும் என்று சொல்ல முத்து அமைதியாகி விடுகிறார்.
அதோடு மீனாவுக்கு மரியாதை இல்லாத இடத்தில் நான் எதுக்கு இருக்கணும் என சொல்லி முத்து கிளம்ப பாட்டி தடுத்து நிறுத்துகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…