பாக்கியாவை நினைத்து புலம்பும் கோபி. ஷாக் ஆன ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டில் எல்லோரும் சாப்பிட காத்திருக்க கோபி மட்டும் ரூமுக்குள் இருக்க ராதிகா சாப்பிட வாங்க என்று கூப்பிடுகிறார்.

வெளியே வந்து சாப்பிட உட்கார்ந்த பின்னரும் கோபி ஏதோ யோசனையில் இருக்க ராதிகா என்னாச்சு என்று கேட்க அப்ராட்டில் இருந்து தன்னுடைய ப்ரெண்ட் போன் பண்ணி இருந்தான். இனியாவை அப்ராட்ல படிக்க வைக்க வேண்டியது தானே என்று நேரடியா கேட்டான்.

இந்த பாக்யா குழந்தையோட வாழ்க்கையை சேர்த்து ஸ்பாயில் பண்ணுறா என்று புலம்ப ராதிகா பாக்யா கம்பெல் பண்ணி சேர்க்கவில்லை. இனியா விருப்பப்பட்டு தான் சேர்ந்து இருக்கா என்று சொல்ல அவர் குழந்தை அவளுக்கு என்ன தெரியும் என கோபி கோபப்படுகிறார். பிறகு திரும்பவும் போன் வந்து உள்ளே எழுந்து சென்று விடுகிறார்.

அடுத்ததாக கொட்டும் மழையில் பாக்யா வீட்டுக்கு வரும் கோபி இனியாவை வெளியே கூப்பிட்டு நாளையில் இருந்து காலேஜா? ஒரு எக்சைட்மென்ட்டா இருக்கியா? காலேஜ் போக தேவையான திங்ஸ் எல்லாம் வாங்கிட்டியா என கேள்வி கேட்க இன்னும் இல்ல டாடி இனிமேதான் வாங்கணும் என்று சொல்ல கோபி நாளைக்கு மாலுக்கு போய் எல்லாம் வாங்கிட்டு வரலாம் என கூறுகிறார்.

இனியா நான் அம்மா கூட போய் வாங்கிக்கிறேன் என சொல்ல கோபி நான் கூட்டிட்டு போறேன் நீயும் நானும் மட்டும் போகலாம் என்று சொல்கிறார். அதன் பிறகு அம்மாவும் காலேஜ் சேர்ந்துட்டாங்க என்று சொல்ல கோபி சாதாரணமாக அப்படியா என்று கேட்டு பிறகு ஷாக் ஆகி என்ன சொல்ற என்று கேட்க இனியா நான் படிக்கிற காலேஜ்ல அம்மாவும் சேர்ந்து இருக்காங்க, ஈவினிங் காலேஜ் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

அந்த இடியட்க்கு இந்த வயசுல இதெல்லாம் தேவையா? உன்ன உன் பிரண்ட்ஸ் முன்னாடி அவமானப்படுத்தணும் என்பதற்காகவே அவ இது எல்லாம் பண்றா என ‌ இனியாவை பாக்கியாவுக்கு எதிராக திசை திருப்ப முயற்சி செய்கிறார். நான் இதை விடமாட்டேன் நான் ஏதாச்சு பண்ணி தடுத்து நிறுத்துவேன் என கோபி இனியாவிடம் சொல்லிவிட்டு நாளைக்கு கண்டிப்பா மாலுக்கு போகலாம் என்று கூறுகிறார்.

அடுத்து பாக்கியா காலேஜுக்கு போக என்ன பொருள் எல்லாம் வேண்டும் என கேட்டு கேட்டு எழுத இனியா கிண்டல் அடிக்கிறார். எனக்கும் சில விஷயம் எல்லாம் தெரியும் அதனால தான் ஏற்கனவே ஒன்னு வாங்கி வச்சிருக்கேன் என ஜாமென்ட்ரி பாக்ஸ் எடுத்துக்காட்ட எல்லோரும் சிரிக்கின்றனர். எதுக்கு எல்லாரும் சிரிக்கிறீங்க இதெல்லாம் தேவை தானே என்று கேட்க ஜெனி இதெல்லாம் அந்த காலம் இப்போ யாரும் இதை யூஸ் பண்றது இல்ல என எடுத்து சொல்கிறார்.

பிறகு கொஞ்ச நேரத்தில் இனியா நீ பண்றது எல்லாம் பாத்தா எனக்கு காலேஜ் போற ஆசையே போயிடும் போல என எழுந்து ரூமுக்கு சென்று விடுகிறார். மறுபக்கம் கோபி ரூமுக்குள் பாக்கியா காலேஜ் போவதை நினைத்து குழம்பிக் கொண்டிருக்க அங்கு வரும் ராதிகா என்ன புலம்பிட்டு இருக்கீங்க என்று கேள்வி கேட்க இனியாவை பார்க்க போனதும் அப்போது பாக்யா காலேஜில் சேர்ந்திருக்கும் விஷயம் தெரிய வந்ததாகவும் சொல்ல ராதிகாவும் ஷாக் ஆகிறார்.

இவங்களுக்கு ஹவுஸ் வைப்பா இருக்கவே தெரியாதா எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை? கேட்டரிங் பண்ண போறாங்க, அப்புறம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் படிக்க போனாங்க இதெல்லாம் ஓகே இப்போ காலேஜ் வேற போகிறார்கள் இதெல்லாம் ரொம்ப ஓவர் என கூறுகிறார்.

மேலும் நீங்க வேணா பாருங்க ரெண்டு நாள்ல ஒன்னும் முடியாம பிச்சுக்கிட்டு ஓடி வந்துருவாங்க என்று சொல்ல ராதிகா வெளியே செல்ல கோபி இரண்டே நாள்ல நீ அவமானப்பட்டு ஓடி வர தான் போற என்று புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிகிறது.

Baakiyalakshmi Episode Update
jothika lakshu

Recent Posts

Blast Movie Press Meet

[Best_Wordpress_Gallery id="1047" gal_title="Blast Movie Press Meet"]

11 hours ago

SEYON Movie Launch

[Best_Wordpress_Gallery id="1045" gal_title="SEYON Movie Launch"]

11 hours ago

Fahadh Faasil and C Prem Kumar New Movie Launch

[Best_Wordpress_Gallery id="1043" gal_title="Fahadh Faasil and C Prem Kumar New Movie Launch"]

11 hours ago

Poo Kaai Kani Movie Pooja Stills

[Best_Wordpress_Gallery id="1041" gal_title="Poo Kaai Kani Movie Pooja Stills"]

11 hours ago

Athiradi Movie Pre Release Event

[Best_Wordpress_Gallery id="1039" gal_title="Athiradi Movie Pre Release Event"]

11 hours ago

Sattendru Maarudhu Vaanilai Pre-Release Event

[Best_Wordpress_Gallery id="1037" gal_title="Sattendru Maarudhu Vaanilai Pre-Release Event"]

11 hours ago