Ramya Krishnan to Host Dating Reality Show
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி வரலாற்றில் புதிய முயற்சியாக, ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய டேட்டிங் ஷோவான ‘Second Love’-ஐ அறிவித்துள்ளது. காதலுக்கு இன்னொரு வாய்ப்பு உண்டு என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, ஜூலை 13 முதல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். தமிழில் இதுவரை இல்லாத வகையில் டேட்டிங் ரியாலிட்டி ஷோவாக உருவாகியுள்ள ‘Second Love’, காதல், உணர்வுகள் மற்றும் புதிய தொடக்கங்களை மையமாகக் கொண்ட தனித்துவமான அனுபவமாக அமைகிறது.
ஜியோஹாட்ஸ்டார் சமீபத்தில் வெளியிட்ட முதல் புரோமோ வண்ணமயமான இசை வீடியோ வடிவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் நிகழ்ச்சி குறித்து ரம்யா கிருஷ்ணன் உற்சாகமாக விளக்க, நடிகை ஸ்ருதிகா அர்ஜூன் நிகழ்ச்சியின் ‘Cupid’ கதாபாத்திரமாக தோன்றுகிறார்.
நம்பிக்கை இழப்பு, மனமாற்றம் மற்றும் மீண்டும் காதலை கண்டடையும் மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளை பிரதிபலிக்கும் இந்த புரோமோ, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. புரோமோவின் இறுதியில், “காதலுக்கு காரணம் தேவையில்லை. இது காதலின் brand new season” என ரம்யா கிருஷ்ணன் கூறுவது நிகழ்ச்சியின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது.
‘Second Love’ மூலம், ஜியோஹாட்ஸ்டார் தமிழ் OTT தளத்தில் ஒரு புதிய வகை ரியாலிட்டி அனுபவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூலை 13 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘System’ படத்தில், சரிதா என்ற கதாபாத்திரத்தில் ஆழமான உணர்வுகளுடன் கூடிய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,…
பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், தனது நீண்டகால லிவ்-இன் பார்ட்னர் கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி…
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், 2012-ஆம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து…
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2', குடும்ப உறவுகள், பெண்களின் கனவு, பெற்றோரின் பொறுப்பு ஆகியவற்றை…
KATTA KARUPPULA Lyric Video | Kanganam | Yugabharathi | Srinisha | Selvaa | Isaiyarasan