இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கேரளா, கோவா மற்றும் மைசூரில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் நடித்த முக்கிய நடிகர்களில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறார்கள். அதேசமயம், எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 10 அல்லது 11 ஆம் தேதி ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகும் என திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ தொடர்பான புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு படத்தின் வெளியீட்டு தேதியா, முதல் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட்டா, அல்லது டிரெய்லர்/டீசர் அறிவிப்பா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்வமாக விவாதித்து வருகின்றனர். மாலை வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
The Tiger is back on the hunt! 🔥 Today 6 PM 😎@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial #Jailer2 pic.twitter.com/KQB60JwSEY
— Sun Pictures (@sunpictures) July 2, 2026
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…