DC Releasing worldwide from July 31
லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘DC’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
முழு ஆக்ஷன் கதையாக உருவாகும் இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக முன்னணி பாலிவுட் நடிகை வாமிகா கபி நடித்துள்ளார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணியாற்றியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், ‘டிசி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, படம் வரும் 31-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Devadas and Chandra are ready to light up the big screen! #DC Releasing worldwide from July 31❤️🔥#DCFromJuly31@Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial @WamiqaG @isanjkayy @mukesh_DOP #PrasannaGK #KannanS @PC_stunts @kabilanchelliah#DCTheBloodyValentineFromJuly31 pic.twitter.com/DaJLz6lx9D
— Sun Pictures (@sunpictures) July 1, 2026
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…