தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி கிரிஷ் பாட்டியிடம் இதுக்கப்புறம் எனக்கு தெரியாம நீ எதுவும் செய்யக்கூடாது அவங்க உறவே நமக்கு தேவை கிடையாது என்று சொல்லி திட்டிவிட்டு நீ வேற தவசத்துக்கு வர சொல்லி இருக்க என்று சொல்ல ஆமா நீ கண்டிப்பா வரணும் என்று சொல்லுகிறார் சரி நீங்க கிளம்புங்க நான் கிளம்பி வரேன் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து மனோஜ் யார் கிளம்பறது என்று கேட்க வித்யா கிட்ட ஊருக்கு போறதா சொல்லிக்கிட்டு இருந்தேன் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். கொஞ்ச நேரத்தில் அனைவரும் பாட்டி வீட்டுக்கு வந்து விடுகின்றனர்.
ஒவ்வொருவராக வந்து பாட்டியை நலம் விசாரித்து விட்டு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்க முத்துவின் நண்பர்கள் வருகின்றனர் முத்து அவர்களிடம் ஜாலியாக பேசி கொண்டு இருக்க அவர்கள் முத்துவிற்கு பிடிக்கும் என கடும்பு பால் எடுத்துக் கொண்டு வருகின்றனர். அதனை முத்து டேஸ்ட் பண்ணி சூப்பராக இருப்பதாக சொல்லுகிறார் பிறகு அனைவருக்கும் கொடுக்கிறார். அதேபோல் க்ரிஷ் ரோகினி நம்ம மகேஸ்வரி என மூவரும் அவர்களும் அவர்களது சொந்த கிராமத்துக்கு வருகின்றனர். உங்க ஊர் ரொம்ப அழகா இருக்கு சரி நம்ம வந்த விஷயத்தை நான் என்கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன் என சொல்லிவிட்டு வெளியில் வந்து ரோகினிக்கு போன் போட்டு பேசுகிறார்
ஊருக்கு வந்துட்டீங்களா எங்க இருக்கீங்க என்று கேட்க வீட்டுக்கு வந்துட்டோம் ரோகினி என்று சொல்லுகிறார் நாங்களும் வந்துட்டோம் என்று சொல்ல ரொம்ப தூரம் இருக்குமா என்று கேட்கிறார் ஒரு மூணு நாலு கிலோ மீட்டர் தான் இருக்கும் என்று சொல்ல நாளைக்கு வேற அங்க வந்துட்டு வரணும் என்று மகேஸ்வரி சொல்ல கொஞ்ச நேரம் தானே பார்த்துக்கலாம் என்று சொல்லுகிறார். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு நபர் வந்து இங்கே ஏன் நீ வந்த வந்திருக்கக் கூடாது போயிடு என்று கத்தி சொல்ல மகேஸ்வரி மற்றும் ரோகினி இருவரும் பயப்படுகின்றனர் சரி நம்ம அப்புறம் பாத்துக்கலாம் நீ எங்கேயும் வெளியே வராத என்று சொல்லிவிட்டு ரோகினி போனை வைக்கிறார் உடனே மனோஜ் வந்து சாப்பிட அழைத்துச் செல்கிறார். மறுபக்கம் முத்துவும் மீனாவும் கோவிலில் பூஜைக்காக சீட்டு வாங்க வருகின்றனர் அப்போது முத்துவின் நண்பர் வந்துவிட அவர்களிடம் முத்துப் பேசிக் கொண்டிருக்க மகேஸ்வரி இடம் பேசிய அதே நபர் வந்து மீனாவிடம் எதுக்காக வந்த இங்க வந்து இருக்க கூடாது போயிடு என்று அதேபோல் சொல்ல மீனா பயப்படுகிறார். உடனே முத்து வந்து நீங்க யாரு நீங்க எதுக்கு வரக்கூடாதுன்னு சொல்றீங்க என்று சொல்ல விதி தான் சொல்றேன் என சிரித்துவிட்டு போக மீனா பயப்படுகிறார் உடனே முத்து அவரே மனநல பாதிக்கப்பட்ட மாதிரி இருக்காரு எதுக்கு பயப்படுற என்று கேட்கிறார்.
வீட்டுக்கு வந்தும் மீனா அதைய நினைத்து பயந்து கொண்டே இருக்க பாட்டி வந்து முத்துவிடம் அந்த பொருள் எல்லாம் கரெக்டா வாங்கிட்டு வந்து சொல்லிவிட்டு போக அண்ணாமலை வந்து பணம் கொடுக்க அதுல நான் வச்சிருக்கேன் அப்பா என்று சொல்லுகிறார் மீனா எதுக்கு இப்படி உட்கார்ந்துகிட்டு இருக்கா என்று கேட்க முத்துவாதெல்லாம் ஒன்னும் இல்ல பா என்று சொல்லுகிறார். ஸ்ருதி பாட்டியிடம் நீங்க ஆன்ட்டியை ஏதாவது வேலை வாங்குங்க இந்த வீடியோ எடுத்து போடுறேன் என்று சொன்ன அப்படியெல்லாம் பண்ண முடியாதுமா நான் அப்படியெல்லாம் அதிகாரம் பண்ண மாட்டேன் என்று சொல்லுகிறார் அவங்க வீட்ல மீனாவை எவ்வளவு டார்ச்சர் பண்றாங்க தெரியுமா என்று சொல்ல அப்படியா என்று சொல்லிவிட்டு விஜயாவிடம் வருகிறார் விஜயாவிடம் பாட்டி என்ன கேட்கிறார்?அதற்கு விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


