மீனா எடுத்த முடிவு, கோபத்தில் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் ரோகிணி பற்றிய உண்மைகளை சொல்வது போலவும் உடனே முத்து கோபப்பட்டு அண்ணாமலை இடம் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டு கோபப்பட உடனே அண்ணாமலை நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்காருவது போலவும் உடனே ரோகிணி மற்றும் மனோஜ் வர முத்து எங்கப்பா இப்படி ஆனதுக்கு நீதான காரணம் என்று சொல்லி ரோகினியை அறைந்து வீட்டை விட்டு வெளியில் தள்ளுகிறார் அப்போது ரோகினி படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து இறந்து விடுவது போல் காட்டுகின்றனர் பிறகு மனோஜ் ரோகிணியை அடிச்சு கொன்னுட்டான் என்று சொன்னவுடன் முத்துவை கைது செய்கின்றனர் உடனே மீனா நம்ம இந்த வீட்டிலே இந்த விஷயத்தை சொன்னா இதுதான் நடக்கும் என்று சொல்லி அமைதியாக இருந்து விடுகிறார். மீனா அழுது கொண்டிருப்பதை பார்த்து ரோகினி வருகிறார்.

என்ன மீனா என்னாச்சு நீங்க இன்னும் ஏன் கில்டியாவே ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க என்று சொல்ல நீ பீல் பண்ண வேண்டிய இடத்துல நான் பண்ணிக்கிட்டு இருக்கேன் என உனக்கு எந்த கவலையும் இல்ல இல்ல என்று சொல்லுகிறார் கண்டிப்பா இந்த உண்மையை வீட்ல சொல்லுவேன் என்று சொல்ல அந்த நம்பிக்கை எனக்கு கிடையாது எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு என் புருஷன் கிட்டயும் என் அப்பாவா இருக்கிற மாமா கிட்டயும் என்னால் உண்மையை மறைச்சுகிட்டு அவங்க முகத்தை பார்த்துட்டு இருக்க முடியாது நான் எங்க அம்மாவோட வீட்டுக்கு போக போறேன் நான் என்ன காரணம் சொல்லிட்டு போறதுன்னு கூட எனக்கு தெரியல என்று சொல்ல நீங்க எந்த முடிவு எடுத்தாலும் அது நல்லது தான் ஆனால் என்னோட உயிரும் கிருஷ்யோட உயிரும் உங்ககிட்ட தான் இருக்கு என்று சொல்லிவிட்டு ரோகினி சென்று விடுகிறார். மறுபக்கம் முத்து கார் செட்டுக்கு வர செல்வமும் அவரது நண்பர்களும் இந்த முருகன் என்ன கல்யாணம் ஆன ஒரு மாசத்திலேயே இப்படி குடிக்கிறான் என்று சொல்லி பேசிக்கொண்டு இருக்க முத்து வந்தவுடன் விஷயத்தைச் சொல்லுகின்றனர் உடனே அவர் என்னாச்சு முருகன் ஏன் குடிக்கிறான் என்று சொல்லி அவரிடம் கேட்கிறார்.

உடனே முருகன் குடித்துவிட்டு அலப்பறை செய்து கொண்டு எல்லாருமே லவ் பண்ணும் போது ஒரு மாதிரி இருக்காங்க கல்யாணம் பண்ண ஒரு மாதிரி மாறிடுறாங்க நீங்க ஏன் இதை என்கிட்ட முன்னாடியே சொல்லல என்று முருகன் கேட்கிறார். என்னடா ஆச்சு இப்ப என்ன நடந்ததுன்னு சொல்லு என்று சொல்ல ஹனிமூன் போறதுக்கு ஆரம்பிச்ச பிரச்சனை என்று சொல்லுகிறார் எனக்கு ஊட்டி போறது பிடிக்கும் ஆனால் கொடைக்கானல் போகணும்னு சொல்றா இதனால தான் பிரச்சனை ஆரம்பிச்சது என்று சொல்ல நீங்க எத்தனை நாள் ஹனிமூன் போகப் போறீங்க என்று முத்து கேட்கிறார் ஆறு நாள் என்று சொல்ல அப்ப மூணு நாள் ஊட்டிக்கும் மூணு நாள் கொடைக்கானலுக்கு போக வேண்டியது தானே என்று சொன்ன சூப்பர் அண்ணே இது தெரியாம போச்சே நான் இதை பத்தி வித்யா கிட்ட பேசுற என்னோட பிரச்சனை சால்வா ஆயிடுச்சு என்று கிளம்பி விடுகிறார். முருகன் மீது வைத்திருந்த கொஞ்சம் சரக்கை முத்து குடிக்கிறார்.

மறுபக்கம் மீனா வீட்டில் உட்கார்ந்து கொண்டு எப்படியாவது சண்டை போட்டு இங்கிருந்து போயிடனும் தாங்குற புருஷன் கிட்ட எப்படி சண்டை போடுவது என்று யோசித்து கொண்டு இருக்க முத்து வந்து சாப்பாடு சாப்பிடலாம் என என்று சொல்ல சாப்பாடு போடுகிறார். அப்போது மீனாவிடம் முருகன் நடந்து கொண்ட விஷயத்தை சொல்ல உடனே இதுதான் சரியான சமயம் பார்த்து முத்துவை குடிகாரன் என்றும் அவரிடம் சண்டை போட பொறுமையாக பேசிக் கொண்டிருந்த முத்து கோபப்பட்டு நான் கொஞ்சமா தான் குடிச்சிட்டு வந்துட்டேன் ஆனா இப்ப ஃபுல்லா குடிச்சிட்டு வரப் போறேன் நீ வீட்ல இருந்தா இது எல்லா கட்டிக்கும் என்று சொல்லிவிட்டு சென்று வருகிறார். உடனே மீனா எனக்கு வேற வழி தெரியல என்று சொல்லிவிட்டு கண் கலங்கி அழுகிறார்.

முத்து குடிக்க போன இடத்தில் என்ன நடக்கிறது? அங்கு என்ன பேசுகின்றனர்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

JAILER 2 Official Trailer

JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson

7 hours ago

பத்தா திரை விமர்சனம்

ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…

8 hours ago

ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம்

சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…

8 hours ago

சிக்மா திரை விமர்சனம்

ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…

8 hours ago

அன்பில் அவன் திரை விமர்சனம்

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…

8 hours ago

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் திரை விமர்சனம்

ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…

8 hours ago