Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தோஷத்தை வெளிப்படுத்திய முத்து, ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

SiragadikkaAasai Serial Episode Update 09-08-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவிடம் நான் உங்க கையால சாப்பிட்டதே இல்லமா என நீங்க பாட்டி வீட்டுக்கு அனுப்பிட்டீங்க இப்போ உங்க கையால சாப்பாடு போடுங்க அம்மா என்று பாசமாக மனம் உருகி கேட்க விஜய் அவன் சாப்பாடு பரிமாறுகிறார். முத்து வேகமாக சாப்பிட கொஞ்ச நேரத்தில் பொரை ஏறுகிறது உடனே விஜயா தட்ட போக அமைதியாக விடுகிறார் பிறகு முத்து ரொம்ப நாள் கழிச்சு உங்க கையாள சாப்பிடலாமா அதனாலதான் என்று சொல்லி சாப்பிட விஜயா சென்று விடுகிறார் பிறகு அண்ணாமலை மற்றும் கிருஷ் செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார் ரவி வந்து அண்ணாமலைக்கு சொல்லிக் கொடுக்க கிரிஷ் நன்றாக விளையாடுகிறார்.

உடனே கிருஷ் பாராட்ட இது ஒரு விளையாட்டா என்று விஜயா கேட்க வேண்டுமென்றால் நீ விளையாடி பாரு என்று சொல்ல அண்ணாமலை முதலில் இந்த விளையாட்டுக்கு பேர் என்னன்னு தெரியுமா என்று கேட்க, விஜயா எழுந்து சென்று விடுகிறார் பிறகு கொஞ்ச நேரத்தில் முத்து சந்தோஷமாக வீட்டுக்கு வந்து இன்னைக்கு என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான விஷயம் நடந்திருக்கு. அது என் வாழ்க்கையில இதுவரைக்கும் நடக்கவே இல்லை என்று சொல்லி எல்லோரிடமும் என்ன விஷயமா இருக்கும் எனக்கே கேட்க குடும்பத்தினர் வேறு ஏதோ சொல்லுகின்றனர் ஆனால் அதெல்லாம் எதுவுமே கிடையாது என்று சொல்ல உடனே அண்ணாமலை அப்ப நீயே சொல்லு என்று சொல்லுகிறார் இன்னைக்கு நான் அம்மா கையால பரிமாறி சாப்பிட்டேன் பா என் வாழ்க்கையில இதுவரைக்கும் கிடைச்சதே கிடையாது. இதைவிட எனக்கு சந்தோஷம் வேற என்னப்பா இருக்கு என்று கேட்கிறார்.

விஜயா கையால சாப்பிட்டியா எங்க என்று கேட்க விஜயா பார்வதி என ஆரம்பிக்க போய் இவர் பார்வதி ஆன்ட்டி வீட்டுக்கு போயிருப்பாரு அப்ப சாப்பாடு பரிமாறி இருப்பார்கள் என்று சொல்ல அப்படியெல்லாம் இல்ல நான் இன்னைக்கு ஒரு அன்னதானம் நடத்தின எல்லாருக்கும் சாப்பாடு போடுற மாதிரி போட்ட அவ்வளவுதான் இவன் எதுக்கு இவ்வளவு எமோஷனலா பேசிக்கிட்டு இருக்கான் என்று சொன்ன நான் சின்ன வயசுல எல்லாம் ஸ்கூல் படிக்கும்போது எல்லாரோட அம்மா வந்து சாப்பாடு ஊட்டி விடுவாங்க ஆனா எனக்கு வர மாட்டாங்க அப்போ நான் ரொம்ப அழுது இருக்கேன். ஏன் நம்ம அம்மா வர மாட்டேங்கிறாங்க என்று, பாட்டி வீட்டுக்கு போய் படிச்சதுனால எனக்கு எதுவுமே கிடைச்சதில்ல.

இந்த வீட்ல கூட எல்லாருக்கும் அவங்க பரிமாறும் போது எனக்கு பரிமாற மாட்டாங்க அதனால தான் எனக்கு இவ்வளவு சந்தோஷம் என்று சொன்ன விஜயா அமைதியாக சென்று விடுகிறார் பிறகு முத்துவும் மீனாவும் ரோகிணியின் அம்மாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு கிருஷ் அழைத்து வருகின்றனர். முத்து நான் போய் பில் வாங்கிட்டு வரேன் என்று சொல்ல, மீனாவும் சாப்பாடு வாங்கிட்டு வரேன் என்று போக கிருஷ் ரோகிணி அம்மா பேசுகிறார். எப்படி இருக்க என்று கேட்டுவிட்டு நம்ம வீட்டுக்கு போயிடலாம் என்று சொல்ல நான் அங்க வரமாட்டேன் வீட்டிலேயே இருக்க என்ன இங்க எல்லாரும் கூட நல்லா பேசி ஜாலியா விளையாடுறேன் ஸ்ருதி ஆன்ட்டி என் கூட நல்லா பாட்டு சொல்லித்தராங்க, அம்மாவ பாத்துகிட்டு இருக்கேன்னு சொன்ன கண் கலங்கிய அவர் பிறகு நான் உங்க அம்மா கிட்ட பேசுறேன்னு சொல்லுகிறார் உடனே முத்தமும் மீனாவும் வந்துவிட நீங்க எங்க வீட்டுக்கு வந்துருங்க என்று சொல்லிக் கொண்டிருக்க ரோகினி வந்து விடுகிறார் இவர்களை பார்த்தவுடன் மறைந்து நின்று இவர்கள் பேசுவது கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நீங்க எங்க வீட்டுக்கு வந்துருங்க நான் உங்களை பத்திரமா பாத்துக்கறேன்னு சொல்ல ரோகிணி இவ எதுக்கு என் மொத்த குடும்பத்தையும் வீட்டுக்கு கூப்பிடறாங்க என்று நினைக்கிறார். நீங்க கண்டிப்பா வந்து தான் ஆகணும் நாங்க நாளைக்கு வந்து கூட்டிட்டு போறோம் என்று சொல்லி சென்று விட பிறகு ரோகிணி வர ரோகிணி என்ன சொல்லுகிறார்?அதற்கு ரோகிணியின் அம்மாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 09-08-25
SiragadikkaAasai Serial Episode Update 09-08-25