தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மனோஜ் பாட்டிக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று யோசிக்க திடீரென்று சின்ன வயசுல பாட்டி நவரத்தின மாலை போட்டிருந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்து அதையே வாங்கி கொடுக்கலாம் என்று சொல்ல ரோகிணியும் சூப்பர் என்று சொல்லி வாங்க கிளம்ப மனோஜ் பாட்டிக்கு வாங்கி வைத்திருந்த புடவையை எடுத்துக்க.. ரிட்டன் பண்ணிடலாம், நவரத்தின மாலை வாங்கிட்டா புடவை எதுக்கு பணம் மிச்சமாகும் என்று சொல்கிறார்.
அடுத்ததாக விஜயா அண்ணாமலையிடமும் வந்து எங்க அம்மாவுக்கு என்ன கிப்ட் வாங்கி தர போறீங்க என்று கேட்க அண்ணாமலை அதான் அம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்கல என்று சொல்ல விஜயா அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க இருந்தாலும் வாங்கி கொடுத்தா சந்தோஷப்படுவாங்க என்று பேசுகிறார். இதைக் கேட்டது அண்ணாமலை ஆச்சரியப்பட எனக்கு நீ அத்தை மேல அக்கறை எல்லாம் இருக்கு என்று சொல்லி விஜயா பிறகு வெளியே வந்து பார்வதிக்கு போன் போட்டு உன் வீட்டில் பையன் ரூம்ல ஒரு டிவி இருக்குல்ல அதை பேக் பண்ணி எடுத்துட்டு வா என் அத்தைக்கு கிப்ட்டா கொடுத்து ஸ்பெஷல் கிப்ட் நான் வாங்கிக்கிறேன். அதுல உனக்கு பங்கு தருகிறேன் என்று பேசுகிறார்.
அடுத்ததாக ஸ்ருதி எனக்கு காட்டிக் கொடுக்கிற கிப்ட் எல்லாம் வேண்டாம் ஆனால் போட்டின்னு வந்தா சின்ன வயசுல இருந்து நான்தான் ஜெயிப்பேன் இப்பயும் நான்தான் ஜெயிக்கணும் என்று சொல்கிறார்.
அதன் பிறகு அண்ணாமலை மீனாவிடம் முத்து பற்றி விசாரிக்க விஜயா அவன் எங்கேயாவது குடிக்க போயிருப்பான் நாலு காலோட வருவான் பாருங்க என்று நக்கலாக பேச நீனா அவர் அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு என்று சொல்கிறார்.
பிறகு சீதா கொண்டு வந்து கொடுத்த போனை வைத்து மீனா பாட்டியை வீடியோ எடுக்கிறார். அடுத்து பாட்டியும் முத்து பற்றி விசாரிக்க முத்துவும் போனை எடுக்காமல் இருக்க மீனா ஒரு வேலை சோகத்தில் குடிக்க போயிட்டாரோ என சந்தேகப்பட்டு பதறுகிறாள். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…
திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…
‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…