siragadikka aasai and baakiyalakshmi upcoming episode promo update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை. பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் கோபி அப்பாவாக போகும் விஷயம் குடும்பத்தினர் எல்லோருக்கும் தெரியவந்த நிலையில் வரும் நாட்களில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது இவர் இங்கே இருக்கிறது எங்களுக்கு பிடிக்கல என்று எழில் சொல்ல கோபி இது நான் கஷ்டப்பட்டு கட்டுன வீடு என்று வசனம் பேச பாக்யா இது என் வீடு நான் வெளியே போக சொன்னா நீங்க போய் தானே ஆகணும் என்று கேட்கிறார். கோபி பாக்யாவிடம் சண்டைக்கு வர எழில் மற்றும் செழியன் அம்மாகிட்ட எகிறும் வேலையெல்லாம் வேண்டாம் அப்புறம் மரியாதை இருக்காது என அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.
நீ சொன்னா நான் போயிடணுமா? எங்கம்மா சொல்லட்டும் என்று கோபி மீண்டும் வீர வசனம் பேச ஈஸ்வரி உன் புள்ளைங்க ஒன்னு ஏதாவது பண்றதுக்குள்ள நீயா கிளம்பி போயிடு என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய பிசினஸ் பற்றிய பேச்சு வர மனோஜ் அம்மா சொன்னா மாதிரி உங்க அப்பா பேரு வைக்கலாம் இன்று சொல்ல ரோகிணி இல்ல ஆண்ட்டி பெயர் வைக்கலாம் என்று சொல்கிறார். பியூட்டி பார்லருக்கு அம்மா பேரு தான் வெச்சோம் ஆனால் அது கையை விட்டு போயிடுச்சு. முத்து பூக்கடைக்கு அம்மா பெயர் தான் வச்சான் அதுவும் கையை விட்டு போயிடுச்சு. அம்மா பேரு ராசி இல்ல அவங்க அன் லக்கி என்று சொல்ல முத்து உள்ளே வந்து நான் ஒரு பேர் சொல்றேன் என்று விஜயா பெயரை சொல்ல நாங்க என்ன பெயர் வைக்கணும்னு நீ சொல்லாத என்று மனோஜ் பதில் கொடுக்கிறார்.
நீ அம்மா பேர தான் வைக்கணும் என்று முத்து சொல்ல மனோஜ் எனக்கும் அம்மா மேல பாசம் இருக்கு என்று டயலாக் விட விஜயா பற்றி மனோஜ் பேசியதை அப்படியே போனில் பிளே செய்ய இருவரும் ரோகினி, மனோஜ் அதிர்ச்சி அடைகிறார்கள்.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…