Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

94-வது வயதில் காதல்கதை படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

Singheetham Srinivasa Rao to direct love story film at 94

94-வது வயதில் காதல்கதை படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

சாதனைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. பயிற்சியிலும் முயற்சியிலும் வீரியம் இருந்தால் போதும் தானே.

அவ்வகையில் பிரபல இயக்​குநர் சிங்கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட சில படங்​களை இயக்கியுள்ளார்.

இவருக்கு கமல்​ஹாசன், ‘அபூர்வ சிங்​கீதம்’ என்​கிற பெயரில் ஒரு கொண்​டாட்ட நிகழ்ச்​சியை சில வருடங்களுக்கு முன் நடத்​தி​னார். இந்​நிலையில், சிங்​கீதம் சீனிவாசராவ் தனது 61-வது திரைப்​படத்தை இயக்க இருக்கிறார். அதை தயாரிக்க இருப்ப​தாக பிரபல தெலுங்கு திரைப்பட நிறு​வன​மான வைஜெயந்தி மூவிஸ் அறி​வித்​துள்​ளது.

இதன் தொடக்கவிழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இது, இளம் தலை​முறை​யின் காதலைப் பேசும் படமாக இருக்​கும் என்று கூறப்​படு​கிறது. சிங்​கீதம் சீனி​வாச ராவ் 94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் என்​பது குறிப்பிடத்​தக்​கது.

Singheetham Srinivasa Rao to direct love story film at 94
Singheetham Srinivasa Rao to direct love story film at 94