விருதுகளை அள்ளிக்குவிக்கும் தனுஷின் கர்ணன்..எத்தனை விருதுகள் தெரியுமா?

கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் கர்ணன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படத்தில் அவருடன் இணைந்து லால், யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம் மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தில் பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் இப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் SIIMA விருதுக்கான விழா நேற்று முன்தினம் பெங்களூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் இந்த விழாவில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், அல்லு அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், ஆர்யா, சிவா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்பொழுது அந்நிகழ்ச்சியில் தனுஷின் கர்ணன் திரைப்படத்திற்காக மூன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை சந்தோஷ நாராயணன் வென்றார். சிறந்த துணை நடிகைக்கான விருதை லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமெளலி வென்றார். சிறந்த பின்ணனி பாடகிக்கான விருதினை தீ வென்றுள்ளார் ஆனால் அவர் சார்பாக அந்த விருதினை சந்தோஷ் நாராயணன் பெற்றுக்கொண்டார். மொத்தம் கர்ணன் திரைப்படம், 3 சைமா (2022) ஆம் ஆண்டிற்கான விருதிகளை பெற்றுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.

jothika lakshu

Recent Posts

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…

12 hours ago

அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம்

அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…

12 hours ago

விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு – முழு விவரம்

விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…

12 hours ago

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ‘வாரணாசி’..!

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…

12 hours ago

தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி… ‘D55’ செம அப்டேட்!

தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி... 'D55' செம அப்டேட்! 'அமரன்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி…

12 hours ago

VALAI Official Teaser

VALAI Official Teaser , Atharvaa, Rupa Manjari, Vani Bhojan , Jeeva Sankar , Ghibran https://youtu.be/yIUR3EpMteY?si=UCnyp_u5Jc1MSVYs

13 hours ago