பிறந்தநாளில் தனது 5 ஆண்டு கனவு திட்டத்தை அறிமுகப்படுத்திய சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது தொழில்முனைவோர் பயணத்திலும் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.

உடல்தகுதி, ஆரோக்கியம் மற்றும் திரைப்படப் பணிகளை சமநிலைப்படுத்திய தனது அனுபவத்தின் அடிப்படையில், இந்தியாவில் தரமான ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘OKUU’ நிறுவனத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் ஈடுபட்ட அவர், இறுதி 11 மாதங்களில் மட்டும் 551 முறை தயாரிப்பு கலவையில் மாற்றங்களை செய்து, தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த தயாரிப்பை உருவாக்கியுள்ளார்.

தாவர அடிப்படையிலான பிரீமியம் புரோட்டீன் பார் ஆக உருவாக்கப்பட்டுள்ள ‘OKUU’-வில் 35 கிராம் புரோட்டீன், 14 கிராம் நார்ச்சத்து மற்றும் 6 கிராம் கொலாஜன் இடம்பெற்றுள்ளன. மேலும் சர்க்கரை, தேவையற்ற ரசாயனங்கள் மற்றும் செயற்கை சேர்மங்கள் இதில் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாக்ஷி அகர்வால் கூறுகையில், “இது ஒரு பிரபலத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட பிராண்ட் அல்ல. இந்திய மக்களுக்கு தரமான ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது. பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த எனது கனவை இன்று அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

‘OKUU’ மூலம் இந்தியாவின் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் துறையில் புதிய முயற்சியை தொடங்கியுள்ள சாக்ஷி அகர்வால், நடிகையாக மட்டுமின்றி தொழில்முனைவோராகவும் தனது பயணத்தை தொடர உள்ளார்.

Suresh

Recent Posts

JAILER 2 Official Trailer

JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson

2 hours ago

பத்தா திரை விமர்சனம்

ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…

3 hours ago

ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம்

சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…

3 hours ago

சிக்மா திரை விமர்சனம்

ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…

3 hours ago

அன்பில் அவன் திரை விமர்சனம்

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…

3 hours ago

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் திரை விமர்சனம்

ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…

3 hours ago