Rajini-173 திரைப்படம், பரபரப்பு Update கொடுத்த ரஜினி

Rajini-173 திரைப்படம், பரபரப்பு Update கொடுத்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 என தொடர்ந்து ஆக்‌ஷன் கதைக்களத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஃபீல் குட் மூவி செய்ய விரும்பி, கதை தேடும் படலத்தில் இறங்கினார். அவ்வகையில், இளம் இயக்குநர்கள் நித்திலன், ராம்குமார் பாலகிருஷ்ணன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரிடம் கதை கேட்டார். இதில், யாரும் எதிர்பாராத விதமாக சிபி சொன்ன கதையை ரஜினி தேர்வு செய்துள்ளார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இச்சூழலில் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட நாட்களில் ரஜினிகாந்த் வீட்டுக்கு ரசிகர்கள் வருவது வழக்கம். அதன்படி பொங்கலை முன்னிட்டு அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு ஏராளமான ரசிகர்கள் கூடினர். அவர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது, ரஜினிகாந்த் கூறும்போது,

‘இந்த பொங்கல் விவசாயிகளுக்கான பொங்கல். விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோஷமாக இருந்தால் தான் மற்றவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும்’ என்றார்.

ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு நடிக்கும் படம் பற்றித் தெரிவிக்கையில், ‘சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கும் படம் ஏப்ரலில் தொடங்கும். அது பொழுதுபோக்குடன் கூடிய கமர்ஷியல் படமாக இருக்கும்’ என கூறியுள்ளார். ரஜினி சொன்ன அப்டேட் தற்போது வைரலாகி வருகிறது.

எனவே, தலைவர்-173 படம் ரசிகர்களுக்கான படமாக மட்டும் இல்லாமல், அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajini-173 movie, Rajini gives a sensational update
dinesh kumar

Recent Posts

Machakalli Lyrical Video

Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran

5 hours ago

சமூக வலைதளங்களில் இருந்து விலகியது ஏன்? மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…

5 hours ago

பாலா இயக்கத்தில் விஜய் சேதுபதி.. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…

5 hours ago

ஜெயிலர் 2 சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…

6 hours ago

டோரதி மனதில் ஆழமாகப் பதிந்தது.. படக்குழுவை பாராட்டிய மாரி செல்வராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…

6 hours ago

சிபிராஜ் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம்.. ரசிகர்களிடம் ஆதரவு கேட்ட நடிகர்

தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…

6 hours ago