‘விவசாயிகளை இந்தச் சமூகம் அங்கீகரிப்பதில்லை’ – நடிகர் கார்த்தி

‘விவசாயிகளை இந்தச் சமூகம் அங்கீகரிப்பதில்லை’ – நடிகர் கார்த்தி

கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள சர்தார்-2, ‘மார்ஷல்’ படங்கள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், விவசாயத் துறைக்​காக உழைக்​கும் மனிதர்​களை​யும், அமைப்​பு​களை​யும் கவுர​வித்து அங்​கீகரிக்​கும் உழவன் ஃபவுண்​டேஷனின் ‘உழ​வர் விருதுகள்’ விழா 7-வது ஆண்டாக சென்னை​யில் நடை​பெற்​றது. இந்த விழா​வில் நடிகரும் உழவன் ஃபவுண்​டேஷனின் நிறுவனரு​மான கார்த்தி, நடிகர் சிவகுமார், ரவி மோகன், ரேவ​தி, கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்​டனர். பேராசிரியர் சுல்​தான் அஹ்மது இஸ்​மா​யில், அனந்து ஆகியோ​ரும் விழா​வில் பங்கேற்றனர்.

சிறந்த விவ​சாயி விருது கோவில் பட்​டியைச் சேர்ந்த பழனியம்​மாளுக்​கும் சிறந்த வேளாண் பங்​களிப்பு விருது மதுரையைச் சேர்ந்த பாமயனுக்​கும் சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது வேலூர் மக்​கள் நலச்​சந்​தைக்​கும் நீர்நிலைகள் மீட்​டெடுத்​தலுக்​கான சிறந்த பங்​களிப்பு விருது திருப்​பூர் ‘வேர்​கள்’ அமைப்புக்கும் சுற்​றுச்​சூழல் பாதுகாப்புக்கான விருது குன்​னூரைச் சேர்ந்த ‘க்​ளீன் குன்னூர்’ உள்​ளிட்ட அமைப்​பு​கள் மற்​றும் தனி​நபர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்​கப்​பட்​டது. விருது பெற்றவர்களுக்கு சான்​றிதழ், கேட​யம் மற்​றும் ரூ.2 லட்​சம் மதிப்​பிலான காசோலை வழங்​கப்​பட்​டன.

விழா​வில் பேசிய கார்த்​தி, ‘’விவ​சா​யிகளை இந்தச் சமூகம் பெரிதாகக் கவனிப்​ப​தில்​லை. அவர்​களை முறை​யாக அங்கீகரிப்பதில்லை. அவர்​களுக்​கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரு​கிறது. ஆனால், அவர்களுடைய உழைப்பு மட்​டும் ஒரு​போதும் நின்றுவிடவில்​லை. எந்த எதிர்​பார்ப்​பும் இல்​லாமல் விவசாயிகளுக்​காக​வும், விவ​சா​யத்​துக் காக​வும் அர்ப்பணிப்​புடன் செயல்​படு​பவர்​களை கொண்​டாட வேண்​டும். இந்த சமூகத்​துக்கு அவர்​களை அடை​யாளம் காட்ட வேண்​டும் என்​ப​தற்காகவே, தொடர்ந்து இந்த உழவர் விருதுகளை வழங்கி வருகிறோம்’ என கூறினார்.

‘This society does not recognize farmers’ – Actor Karthi
dinesh kumar

Recent Posts

Ennamo Sonneenga Perusa Lyrical Video

Ennamo Sonneenga Perusa Lyrical Video | James Vasanthan, Gaana Shiva | Dushy, Janany Kunaseelan

3 hours ago

Kaathaaga Vaazhaporen Lyrical Video

Kaathaaga Vaazhaporen Lyrical Video | Magudam | Vishal | GV Prakash | Dushara

4 hours ago

Seppu Sela Video Song

Seppu Sela Video Song | Ram in Leela | Rio Raj | Vartika | Ankit…

4 hours ago

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: நடிகை ஜியா சங்கருக்கு நிச்சயதார்த்தம்!

'காதல் ரீசெட் ரிப்பீட்' மற்றும் மராத்தி திரைப்படமான 'வேத்' மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஜியா சங்கர், தனது நிச்சயதார்த்தத்தை…

4 hours ago

இதனால் தான் ‘மக்கள் காவலன்’ கதையை தேர்வு செய்தேன் – நடிகர் மணிகண்டன்

'பைசன் காளமாடன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமாக 'மக்கள்…

4 hours ago

‘ராமாயணா’ திரைப்படம் நவம்பர் 6-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது!

இந்துக்களின் முக்கிய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘ராமாயணா’. இதில்…

4 hours ago