ரகு தாத்தா திரை விமர்சனம்

இக்கதை 1960 களில் நடக்கும் சூழல் கதையாக அமைந்து இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் ஒரு அழகிய ஊரான வள்ளுவன்பேட்டை என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தமிழ் மொழி மீது மிகப் பெரிய பற்று இருக்கிறது. பெரியார் சிந்தனையும், பெண்ணிய கருத்துகளை அதிகம் பேசக்கூடிய நபர். ஊரில் இந்தி சபா வரக்கூடாது என போராட்டம் நடத்துகிறார். அந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கீர்த்தி சுரேஷை ஒருதலையாக காதலித்து வருகிறார் கதாநாயகனான ரவீந்தர். இவர் முற்போக்கு சிந்தனையாளராக தன்னை சித்தரித்து கீர்த்தி சுரேஷிடம் நடந்துக் கொள்கிறார். வீட்டில் கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் நடத்த வேண்டும் என குடும்பத்தினர் வற்புறுத்துகின்றனர்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேத்த வேண்டும் என முடிவெடுத்து ரவீந்தரை திருமணம் செய்துக் கொள்ள சம்மத்திக்கிறார் கீர்த்தி சுரேஷ். நிச்சயம் ஆன பிறகு ரவீந்தர் உண்மையில் மிகவும் மோசமானவர், பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பவர் என கீர்த்தி சுரேஷுக்கு தெரிய வருகிறது. உண்மை தெரிந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் இறுதியில் ரவீந்தரை திருமணம் செய்தாரா? தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.நடிகர்கள்கீர்த்தி சுரேஷ் பெண்ணியம் பேசும் நயராக துறுதுறுவெனவும் அதே சமயம் தன்னம்பிக்கையாக நடித்து இருக்கிறார். கதாநாயகனாக நடித்து இருக்கும் ரவீந்திர விஜய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது உடல் மொழி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. கீர்த்தி சுரேஷிற்கு அண்ணனாக நடித்த ராஜேஷ் பாலச்சந்திரன் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கும் இஸ்மத் பானு டைமிங்கில் பேசி பார்வையாளார்களின் மனதில் பதிந்துள்ளார். மாமி கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கும் தேவதர்ஷினி மிகவும் சிறப்பான நகைச்சுவையை வெளிப்படுத்தியுள்ளார்.தாத்தாவாக எம்.எஸ் பாஸ்கர் அவரது குசும்புதனத்தை விட்டுக்கொடுக்காமல் நடித்து இருக்கிறார். வங்கி மேலாளராக நடித்து இருக்கும் ராஜிவ் ரவிந்திரனாதன், பிழையான தமிழில் பேசி ஸ்கோர் செய்துள்ளார்.இயக்கம்இந்தி திணிப்பையும் ஆண் ஆதிக்கத்தையும் மையமாக கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுமன்குமார். முதல் பாதி சற்று தொய்வாக சென்றாலும், இரண்டாம் பாதியில் அதை சரிக்கட்டிருக்கிறார்.

படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் பல இடங்களில் வொர்க் அவுட் ஆகியுள்ளது. படத்தின் வசனம் மிகவும் அழுத்தமாக எழுதியுள்ளார். இன்னும் இந்தி திணிப்பால் சமூகத்திற்கு ஏற்படும் பிரச்சனையை இன்னும் அழுத்தமாக சொல்லிருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். இந்தி திணிப்பையும் கலாச்சார திணிப்பையும் ஒன்றாக இணைத்து சொன்னவிதம் பாராட்டுக்குறியது.இசைஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் சிறப்பு. பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார். ஒளிப்பதிவுயாமினி யாக்னாமூர்த்தியின் ஒளிப்பதிவு 60களில் காலகட்டத்திற்கு ஏற்றார் போல் அழகாக படம் பிடித்து இருக்கிறது.தயாரிப்புகொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ரகு தாத்தா திரைப்படத்தை தயாரித்துள்ளது.”,

raghu-thatha-movie review
jothika lakshu

Recent Posts

Run Official Trailer

Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…

2 days ago

“வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு!” – ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…

2 days ago

“தவறான புரமோஷன்தான் ‘புலி’ படத்தின் தோல்விக்கு காரணம்!” – நட்டி ஓபன் டாக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…

2 days ago

கோலிவுட்டில் இசைப் போட்டி சூடுபிடிக்கிறது… அனிருத் Vs சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…

2 days ago

கமல்ஹாசனின் AI எச்சரிக்கைக்கு ஸ்ருதி ஹாசனின் முழு ஆதரவு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…

2 days ago

சிக்மா மூலம் கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…

2 days ago