Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் பாகம் 2 குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த ஜெயம் ரவி

ponniyan selvan2 movie release update

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இப்படம் தற்போது வரை ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தற்போது PS1 திரைப்படம் அமேசான் பிரைம் OTT தளத்திலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றின சுவாரஸ்யமான தகவலை நடிகர் ஜெயம் ரவி பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது, பொன்னியின் செல்வன் 1 பாகத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது, அந்த விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி PS2 பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என்பதை உறுதி செய்திருக்கிறார். மேலும் அதே நேரத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருப்பதால் இரு படக்குழுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ponniyan selvan2 movie release update
ponniyan selvan2 movie release update