“பேரன்பும் பெருங்கோபமும்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரல்

பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜே. பி. தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார்.

நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய இந்த படத்தை ரியோட்டா மீடியா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் குறித்து பேசிய இயக்குனர், ” கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Peranbum perungobamum movie first look poster update
jothika lakshu

Recent Posts

கண்டிப்பான அம்மாவாக இருக்க மாட்டேன்! – எதிர்கால குழந்தைகள் குறித்து நடிகை தமன்னா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…

59 minutes ago

தினமும் 15 முறை ‘I Love You’ சொல்வாள்.. ராஷ்மிகா குறித்து நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…

1 hour ago

ஆமாம், நான் கருப்புதான்.. உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ கொடுத்த பதிலடி!

திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…

1 hour ago

சஞ்சய் தத்தின் ‘பிரதமர்’ பேச்சு.. இணையத்தில் சர்ச்சை – விளக்கம் அளித்த நடிகர்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…

1 hour ago

யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முழுமையான கதை விவரங்கள்…

1 hour ago

JAILER 2 Official Trailer

JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson

17 hours ago