Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நாகார்ஜுனாவின் “செல்போன் பயம்”!

Nagarjuna’s Fear of Mobile Phones

ஐதராபாத்தில் நடைபெற்ற சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் நாகார்ஜுனா பங்கேற்று, செல்போன் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், “எனது செல்போனை யாராவது ஹேக் செய்துவிடுவார்களோ என்ற பயம் எப்போதும் உண்டு. அதனால் 15 நாட்களுக்கு ஒருமுறை எனது பாஸ்வேர்டை மாற்றிவிடுவேன். வீட்டில் பயன்படுத்தும் வைஃபை பாஸ்வேர்டையும் அடிக்கடி மாற்றுவேன்.

அதையும் ஹேக் செய்துவிடுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு எனக்கு உள்ளது. அதுமட்டுமின்றி, செல்போனில் புகைப்படங்கள் எடுப்பதையும் தவிர்த்து வருகிறேன். பிரபலமாக இருப்பதால் நாம் அனைத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி அதிகாரி போல் ஒருவர் என்னை செல்போனில் தொடர்புகொண்டார். வழக்கமாக எனது வங்கியின் தொடர்பு மேலாளர்தான் அழைப்பார். ஆனால், அந்த அழைப்பு வித்தியாசமாக இருந்தது.

அவர் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதில் மிகவும் திறமையாகவும், நம்பிக்கையுடனும் பேசினார். எவ்வளவு பேசியும் நான் சம்மதிக்கவில்லை. இறுதியில், ‘நீங்கள் புத்திசாலி’ என்று கூறிவிட்டு அந்த நபர் அழைப்பைத் துண்டித்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.