ஹாஸ்பிடலுக்கு வந்த சூர்யா, நந்தினி.. மாதவி சொன்ன வார்த்தை,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் இவங்க என்ன சொன்னாலும் நான் வந்துகிட்டு தான் இருப்பேன் என நந்தினி சொல்லுகிறார். பிறகு அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்துருச்சு செல்ல மறுபக்கம் அர்ச்சனா குடித்துக்கொண்டு சூர்யா,சூர்யா என புலம்புகிறார். நீ அங்க இருக்க கூடாது சூர்யா நீ வந்துடு என்று பேசிக்கொள்கிறார். மறுபக்கம் அனைவரும் தூங்கப் போக சிங்காரம் மாடியில் படுக்கப் போவதாக சொல்ல, சூர்யாவும் நானும் வரேன் என்று சொல்ல அம்மாச்சி அப்படியெல்லாம் போகக்கூடாது நீயும் தம்பியும் ரூம்ல படுத்துக்கோங்க என்று சொல்லி அம்மாச்சி பாய் தலையணை கொடுத்து ரூமுக்கு அனுப்புகிறார். பிறகு ரூமுக்கு வந்த நந்தினி இது உங்களுக்கு கஷ்டமா இல்லையா என்று கேட்க அதெல்லாம் இல்லை என்று சொல்லுகிறார்

சும்மா சொல்லாதீங்க சார் அங்க ரூம்ல வசதியா இருந்துட்டு இங்க எப்படி தூங்குவீங்க என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லுகிறார். அதெல்லாம் விட எனக்கு வேற ஒன்னு நினைச்சா தான் தூக்கம் வராது என்று நினைக்கிறேன் என்று சொல்ல என்ன சார் என்று கேட்கிறார். உன் தங்கச்சிங்க உங்க அம்மாச்சி எல்லாரும் பேசுறது பழகுவதை பார்க்கும்போது எவ்வளவு ஆசையா இருக்கு தெரியுமா ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து ஆசையா பேசி பழகி பாசமா நடந்துக்குறாங்க நீ அடிக்கடி ஊருக்கு போகணும்னு சொல்லுவ அது ஏன் இப்பதான் எனக்கு தோணுது இப்படி ஒரு பாசமான குடும்பம் இருக்கும்போது எப்படி மிஸ் பண்ண தோணும். எனக்கும் தான் அக்கா தங்கச்சி இருக்காங்க ஆனா அவங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு பாண்டிங் இல்லை. காசு பணத்தை விட இது மாதிரி இருக்கிற சந்தோஷம் ரொம்ப பெருசு நந்தினி அந்த வகையில நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி.

எனக்கு கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு என்று சொல்ல, நந்தினி சரி டைம் ஆகுது நம்ம தூங்கலாம் என்று சொல்ல சூர்யா லைட் ஆப் செய்துவிட்டு படுக்க இடி இடிக்கிறது. உடனே நந்தினி பயத்தில் அலறி உட்காருகிறார். உடனே கொஞ்சம் கொஞ்சமாக சூர்யா பக்கத்தில் நகர்ந்து உட்கார, அர்ச்சனா குடித்துக்கொண்டே சூர்யா பக்கத்தில் நந்தினி படுத்துக்கொண்டிருப்பது போலவும், சூர்யா நந்தினி அழகை ரசிப்பது போலவும் கனவு கண்டு எழுந்து விட இனிமே உன்ன அங்க இருக்க விடமாட்டேன் என முடிவெடுத்து வெளியில் வந்து மினிஸ்டரை எழுப்பி உங்க கிட்ட பேசணும் என அழைத்து வருகிறார். நீங்க எனக்கு அப்பா தானே என்று சொல்ல உன் அப்பா தான் அம்மா என்று சொல்ல நீங்க எனக்காக என்ன வேணா பண்ணுவீங்களா என்று கேட்க என்ன வேணா பண்ணுவ சொல்லுமா என்று கேட்கிறார். அந்த நந்தினி குடும்பம் ஊருக்கு வந்துட்டாங்க அந்த நந்தினி கூட ஒரே ரூம்ல சூர்யா இருக்கான் அவன போய் நீ இப்ப கூட்டிட்டு வாங்க என்று அடம் பிடிக்க, அதற்கு மினிஸ்டர் அவன் எந்த ஏரியால இருக்கான்னு தெரியாம எப்படி கூட்டிட்டு வர முடியும் என்று கேட்க எனக்கு தெரியும் பா நீ இப்பவே வா கூட்டிட்டு வரலாம் என்று சொல்ல மறுப்பக்கம் சூர்யா தூக்கம் வராமல் நின்று கொண்டிருக்கிறார்.

அந்த ஏரியாவில் கரண்ட் கட் பண்ணிடுங்க அவன் ஏசி இல்லாம இருக்க மாட்டான் வெளியில் வந்துடுவான் என்று சொல்ல அந்த ஏரியாவில் கரண்ட் கட் பண்ண முடியாது என்று சொல்ல நீ மினிஸ்டர் தானப்பா எனக்கு தெரியாது இப்பவே நீ பவர் கட் பண்ணி ஆக வேண்டும் என்று அடம்பிடிக்க மினிஸ்டரும் வேறு வழியில்லாமல் போன் பண்ணி விஷயத்தை சொல்ல அவர்கள் ஒரு மணி நேரம் கரண்ட் வராமல் பண்ணிடலாம் என்று சொல்ல அர்ச்சனா அப்படி எல்லாம் இல்ல ஆறு மணி வரைக்கும் வரக்கூடாது என்று சொல்ல அதற்கு அவர் அது விஐபி இருக்க ஏரியா அப்படியெல்லாம் ஆஃப் பண்ண முடியாது என்று சொல்ல, அப்படி ஆறு மணி நேரம் ஆஃப் பண்ணனுமா என்ன பண்ணனும் என்று கேட்க ட்ரான்ஸ்பார்ம் வெடிக்கணும் என்று சொல்ல அதை நான் பாத்துக்குறேன் என்று மினிஸ்டர் போனை வைக்கிறார். உடனே நந்தினி வீட்டில் கரண்ட் ஆஃப் ஆகிறது.

உடனே ரஞ்சிதா எழுந்து அம்மாச்சி மற்றும் புனிதா இருவரையும் வெளியில் படுக்கலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு அம்மாச்சி விசிறி ஏதாவது இருக்கா என்று கேட்க இல்லை என்று புனிதா சொல்ல சரி மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கலாம் என்று வருகின்றனர். உடனே சூர்யா உள்ளே வர நந்தினி என்ன சார் இருட்டா இருக்கு என்று சொல்ல கரண்ட் ஆஃப் ஆகி ரொம்ப நேரம் ஆகுது என்று சொல்லுகிறார். இப்ப எப்படியோ இங்க தூங்க முடியாது அதனால வெளியே ஒரு வாக் போகலாமா என்று கேட்டு விட்டு வெளியில் வர, மூவரும் கண் விழித்து இருப்பதை பார்த்து நீங்களும் தூங்கலையா என்று கேட்கிறார். இப்போ என்ன பண்றது என்று முடிவெடுத்து அம்மாச்சி நீ உட்காரு உன்னோட மடி மேல நாங்க படுத்துக்கிறோம் என்று சொல்லி படுத்து கொள்கின்றனர்.சூர்யாவிற்கு இருமல் வர அம்மாச்சி தம்பிக்கு தண்ணி கொடும்மா என்று சொல்ல நந்தினி ரூமுக்கு வர சூர்யாவும் இருவரும் மோதிக் கொள்கின்றனர். மறுபக்கம் அர்ச்சனா நந்தினி குடும்பத்தினர் இருக்கும் வீட்டு முன் வந்து காரில் நிற்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் கீழே விழுந்து அடிபட அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர் சுந்தரவல்லி என்ன ஆச்சு என்று டென்ஷன் ஆக இருக்க மாதவி நீங்க டென்ஷன் ஆகாதீங்கம்மா எதுவும் அப்பாவுக்காகாது என்று சொல்ல டாக்டர் வந்து சொல்ற வரைக்கும் என்னால எதுவும் பண்ண முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த நேரம் பார்த்து சூர்யாவும் நந்தினியும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர்.

சூர்யா பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்து டாடிக்கு என்ன ஆச்சு அவரு அசால்டா இருக்க மாட்டாரே என்ன பிரச்சனை என்று கேட்டுக் கொண்டே இருக்க சுந்தரவல்லி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க மாதவி எங்களுக்கு எதுவும் தெரியாது டாக்டர் வந்ததா தெரியும் என்று சொல்லுகிறார் கொஞ்ச நேரத்தில் டாக்டர் வெளியில் வந்து அவர் விழும் போது கையை கீழே ஊனிட்டு இருக்காரு அதனால கையில தசை புடிச்சிருக்கு அவ்வளவுதான் பிசியோதெரபி கொடுத்தால் சரியா போயிடும். எதுவும் ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம் இன்னும் ஒரு மணி நேரத்துல நீங்க கூட்டிட்டு போயிடலாம் என்று சொல்லுகிறார். மாதவி நாங்க போய் பார்க்கலாமா என்று கேட்க ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு கொஞ்ச நேரம் கழிச்சு போய் பாருங்க என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்று விடுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


Moondru Mudichu Serial Today Promo Update 22-04-25
jothika lakshu

Recent Posts

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

11 hours ago

சன் டிவியில் மூன்று சீரியல்கள் இணையும் மெகா சங்கமம்..!

சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…

12 hours ago

சுந்தரவல்லி வளையில் சிக்கிய சூர்யா, நந்தினிக்கு விழுந்த அறை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

12 hours ago

தளபதி விஜய்க்கு திரிஷா சொன்ன வாழ்த்து..!

விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…

19 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட் யார் தெரியுமா?முழு விவரம் இதோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…

19 hours ago

மதராசி : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

19 hours ago