moondru mudichu serial promo update 01-01-26
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி திட்டம் போட்ட மாதிரி அவள வேலை வாங்கிக்கிட்டே இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்க மாதவி நந்தினியிடம் மேல துணி இருக்கு அத போய் ஹைன் பண்ணு என்று சொல்ல, நந்தினியும் செய்கிறார். மறுபக்கம் சூர்யா கம்பெனி ஆட்களுடன் டான்ஸ் ஆடிக்கொண்டு அருணாச்சலத்தை பார்க்க மேலே செல்கிறார். பிறகு இவர்கள் வருபவரை வரவேற்கின்றனர். வழக்கம்போல் அருணாச்சலம் நார்மலாக ரெடியாக சூர்யா கோட் சூட் போட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவரே போட்டு விடுகிறார். சுந்தரவல்லி செலக்சன் எல்லாம் நல்லா இருக்காது சூர்யா செலக்சன் தான் சூப்பர் என்று சொல்லி கூலிங் கிளாஸ் போட்டு டான்ஸ் ஆடிக்கொண்டே அழைத்து வருகிறார். அருணாச்சலமும் சூர்யா போல டான்ஸ் ஆடி அசத்துகிறார். இருவரும் டான்ஸ் ஆடிக் கொண்டே வர கீழே எல்லோருடனும் சேர்ந்து அருணாச்சலம் டான்ஸ் ஆடி சந்தோஷப்படுகிறார். அருணாச்சலம் சாரா பாத்தா 50 வயசு ஆன மாதிரி தெரியல என்று சொல்ல அதற்கு சுந்தரவல்லி மாதிரி ஒரு பொண்டாட்டி இருக்கணும் என்று சொல்ல சுந்தரவல்லி சந்தோஷப்படுகிறார்.
நந்தினி இறங்கி வருவதை கவனித்த சுந்தரவல்லி மாதவியை அனுப்பி வைக்கிறார். உடனே மேல போய் டேபிள் அரேஞ்ச் பண்ணு என்று சொல்ல, ஐயா இன்னும் கொஞ்ச நேரத்துல கேக் வெட்டிடுவார் என்று சொல்ல அவர் வெட்டட்டும் நீ போய் அதை அரேஞ்ச் பண்ணு என்று சொல்லி அனுப்பி விடுகின்றனர். பிறகு கேக் வெட்ட ஏற்பாடுகளை செய்ய அருணாச்சலம் கேக் வெட்டும் நேரத்தில் நந்தினி எங்கே என்று கேட்கிறார். கரெக்டா நந்தினி காணோம் என்று சொல்ல சூர்யா நான் போய் கூட்டிட்டு வரேன் என சொல்லி சொல்கிறார்.
வேலைக்காரிக்காக இப்படி வெயிட் பண்றது தப்பா இருக்கு கேக் கட் பண்ணுங்க என்று சொல்ல, சூர்யா நந்தினியை கூட்டிட்டு வரட்டும் என்று சொல்ல, சொசைட்டில எல்லாம் பெரிய ஆளுங்க வந்திருக்காங்க அவங்க முன்னாடி அசிங்கப்படுத்திக்கிட்டு இருக்காதீங்க என்று சொல்ல மாதவியும் சுரேகாவும் கேக் வெட்ட சொல்லுகின்றனர். முதல்ல நந்தினியும் சூர்யாவும் வரட்டும் என்று சொல்ல அப்போ வேலைக்காரி வராமல் நீங்க கேக் கட் பண்ண மாட்டீங்களா என்று சுந்தரவல்லி கேட்கிறார். சூர்யா கோபமாக மேலே வந்து நந்தினியை அழைத்து கொண்டு வருகிறார். இன்னும் கேக் வெட்டலையா என்று நந்தினி கேட்க இந்த வீட்டோட மருமகள் நீ இல்லாத போது எப்படி கேக் வெட்டுவாங்க டாடிதான் உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என்று சொல்லுகிறார். இப்போ நீங்க கேக் கட் பண்ணுங்க டாடி என்று சொல்ல சுந்தரவல்லி மாதிரி சுரேகா அசோகன் நான்கு பேரும் அங்கிருந்து வந்து தூரமாக உட்கார்ந்து விடுகின்றனர்.
நான் இல்லாம எப்படி கேக் வெட்டுகிறார் என்று நான் பார்க்கிறேன் என்று சொல்ல, அருணாச்சலம் ஒரு பக்கம் நந்தினியும் ஒரு பக்கம் சூர்யாவையும் நிற்க வைத்து கேக் கட் பண்ணுகிறார். முதலில் சூர்யாவிற்கு ஊட்டி விட்ட அருணாச்சலம் பிறகு நந்தினிக்கும் ஊட்டி விட இவர்கள் பார்த்து கடுப்பாகின்றனர். ஒவ்வொருவராக கிப்ட் கொடுத்து முடித்தவுடன் சூர்யா ஒரு நிமிஷம் வந்துரு டாடி என்று சொல்லிவிட்டு ரூமுக்குச் சென்று விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நான் அருணாச்சலமாக மாறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் நந்தினி ஒரு நாளும் சுந்தரவல்லியா மாற மாட்டா என்று சொல்லுகிறார். உங்க அம்மா இன்னும் என்ன குடும்பத்துல ஒருத்தியா ஏத்துக்கல அதுக்குள்ள நீங்க போட்டோல நான் இருக்கிற மாதிரி ஏன் பண்ணீங்க என்று கேட்க மறுப்பக்கம் சூர்யா கொடுத்த போட்டோ பிடிச்சிருப்பதால் யார் இதை பண்ணது என்று கேட்க சுந்தரவல்லி நான்தான்னு சொல்லுகிறார் என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…