'Moonwalk' movie song sung by A.R. Rahman and danced by Prabhu Deva goes viral
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’ மூவி ஸாங் வைரல்
பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் நிர்மலாதரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்படத்தில் இருந்து வெளியான ‘ஏத்து’ வீடியோ பாடல் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் பிரபுதேவா கடினமான நடன அசைவுகளை எளிதாக ஆடி ரசிக்க வைத்துள்ளார். இப்பாடல் வெளியான 2 வாரங்களிலேயே யூடியூப்பில் 11 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்பாடலுக்கு, ஆப்பிரிக்காவின் பிரபலமான ‘ஹைபர்ஸ் கிட்ஸ் ஆப்பிரிக்கா’ என்ற குழந்தைகள் இசைக்குழு, நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அந்த நடனத்தை வரவேற்று பதிலளித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ravana Tandavam Song | Ramayana | Ranbir, Yash | Namit M, Nitesh T | AR…
Patta Sarakku Lyrical Video - INK Movie | Anand Babu | Aishwarya | Chytanya Sankaran…
Ex Reunion Day Official Teaser | S Siva Krishna | Sterlin Nithya | SR Prabu
தமிழ்த் திரையுலகில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பின்னணிப் பாடகி ஜனனி. ‘அசல்’ படத்தின்…
‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் தற்காலிகமாக ‘D56’…
தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான மமிதா பைஜு, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இணையத்தில் பரவிய…