Lokesh Kanagaraj's 'DC' Glimpse Video Released!
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு!
தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தற்போது முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருகிறார். கூலி படத்தை தொடர்ந்து கைதி-2 படப்பிடிப்பு என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படம் மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகும் படம், ‘டிசி’. இதை ‘சாணிக்காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்த மிரட்டலான ஆக்ஷன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார்.
இப்படத்தில் தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார். வாமிகா கபி சந்திராவாகவும், சஞ்சனா, பார்வதியாகவும் நடிக்கின்றனர். காதலர் தினத்தையொட்டி இப்படத்தில் இருந்து கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கோடைக்காலத்தில் இந்தத் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…
‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை கயாடு லோகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும்…
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…